புதன்கிழமை, ஜனவரி 1, 2025

முக்கியமான 3 வீரர்களை ஒதுக்கும் இந்திய அணி..கேள்விக்குறியாகும் கிரிக்கெட் கேரியர்

முதல் போட்டியில் தோற்றாலும் சற்று சுதாரித்துக்கொண்டு அடுத்து இரண்டு போட்டியிலும் அசால்டாக வெற்றி பெற்றது இந்திய அணி. இந்த.உலகக்கோப்பை போட்டிக்கு முன்னர் இந்தியாவின் இந்த வெற்றி வீரர்களுக்கு நல்ல ஒரு தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது.

இந்த தொடருக்கு அடுத்து இந்தியா, தென் ஆப்பிரிக்க அணியுடன் மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஐம்பது ஓவர் போட்டியில் விளையாட இருக்கிறது.இந்த தொடர் செப்டம்பர் 28ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இருந்து 3 முக்கிய கழட்டி விடப்பட்டுள்ளனர்.

Also Read: அநியாயம் செய்யும் ராகுல் டிராவிட்.. இந்திய அணி நட்சத்திர வீரருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

அந்த மூன்று வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்த வீரர்கள் அவர்கள். இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த வீரர்களை இப்படி அழைக்கப்படுவது அவர்களின் தன்னம்பிக்கையை கேள்விக்குறியாகிறது.

ஷிகர் தவான்: இந்திய அணியில் ஒரு காலத்தில் ரோகித் சர்மாவுடன் ஓபனர் ஆக களமிறங்கி தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணிக்காக பல வெற்றிகளை தேடித் தந்துள்ளார். ஐசிசி போட்டிகளில் அனைத்திலும் இவரது பங்களிப்பு சிறப்பாக இருக்கும். ஒரு போட்டியில் விளையாட வில்லை என்றாலும் மறு போட்டியில் சுதாரித்துக்கொண்டு சென்சுரி அடிக்கக்கூடிய வீரர் இவர. இவரை சமீப காலமாக இந்திய அணி புறக்கணித்து வருகிறது.

Also Read: தலைகனம் இல்லாத ராகுல் டிராவிட்.. கங்குலியை வியக்க வைத்த அந்த செயல்!

சுப்னம் கில்: இந்திய அணியில் வளர்ந்து வரும் இளம் வீரர் இவர். டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியுடன் தனது ஆதிக்கத்தை செலுத்தி இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்த வீரர் இவர். ஒருநாள் போட்டியிலும் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணியை நல்ல நிலைமைக்கு எடுத்துச் செல்வார்.இவரும் முக்கியமான போட்டிகளில் இருந்து புறக்கணிக்கப்பட்ட வருகிறார்.

புவனேஸ்வர் குமார்: கடந்த தொடரில் இவரின் பங்களிப்பு மிக மோசமாக இருந்தது. இதனாலேயே இவர் இந்திய அணியில் இருந்து தென் ஆப்பிரிக்கா தொடரில் நீக்கப்பட்டுள்ளார். ஒரு காலத்தில் இந்திய அணியின் சிறந்த பவுலர் இவர்தான். இப்பொழுது இவரை இந்திய அணி ஒரு ஆப்ஷனல் பௌலராக யூஸ் பண்ணி வருகிறது.

Also Read: மனைவியுடன் ரோமன்ஸ் செய்யும் ரோகித்ஷர்மா.! வைரலாகும் புகைப்படங்கள்.!

Trending News