ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வந்ததில் இருந்து அதிரடியாக ஆடக்கூடிய வீரர்கள் பலர் உருவாககி வருகின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் தங்களுடைய திறமைகளை நிரூபித்துக் காட்டும் இளம் படைகள் உருவாகிக் கொண்டிருக்கிறது இந்த வரையறுக்கப்பட்ட 20 ஓவர் போட்டிகள்.
நடப்பு ஐபிஎல் போட்டிகளில் ஹர்ஷல் பட்டேல், ஆவேஸ் கான், தீபக் ஹூடா, பதோனி போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் கூடிய விரைவில் இந்திய அணியில் ஒரு நிலையான இடத்தை பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி இளம் வீரர்கள் உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில் சீனியர் வீரர் ஒருவர் விளையாட முடியாமல் திணறி வருகிறார். ஏற்கனவே இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வந்தவர் சமீபத்தில் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.
சீனியர் வீரரான ரஹானே தான் விளையாடிய ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 133 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். சன்ரைசர்ஸ்க்கு எதிரான போட்டியின் போது ரஹானேவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஃபில்டிங்கில் கூட பங்கேற்கவில்லை. இந்த நிலையில் அவர் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் கழட்டிவிடபட்டுள்ளார்.
ஏற்கனவே அவர் ரன் அடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில் இந்த காயம் வேறு அவரது எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. அதனால் இனிமேல் அவர் இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்றால் அது மிகவும் கடினம்.
இந்திய அணியில் நாளுக்கு நாள் புது வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்து கதவுகளைத் தட்டி கொண்டே இருக்கின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில் ரஹானே சரியாக விளையாடவில்லை என்றால் அது அவரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடும் என்று சீனியர் வீரர்கள் அன்றே கூறிவந்தனர்.