திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கடைசியில் இந்திய அணிக்கு வந்த நல்ல காலம்.. பூஜாராவிற்கு டாடா போட்டு அணிக்குள் வந்த 4 ஆல்ரவுண்டர்கள்

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி அங்கே இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கும் திட்டத்தை அமல்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்தால் பிசிசிஐ வேறு ஒரு திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது.

வலுமிக்க 16 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. இதில் சீனியர் வீரரான சட்டீஸ்வர் புஜாரா கழட்டிவிடப்பட்டுள்ளார். இவர் உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் சரிவர விளையாடாததால் இவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. ரோஹித் சர்மா, விராட் கோலி, ரஹானே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்த முறை இளம் வீரரான ருத்ராஜ் மற்றும் இசான் கிஷான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் சரிவர தன் பார்மை நிரூபிக்காத கே எஸ் பரத் அணியில் மீண்டும் இடம் பெற்றுள்ளார். இரண்டு விக்கெட் கீப்பர்கள் இந்தத் தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆல் கவுண்டர்கள் வரிசையில் இந்திய அணி 4 வீரர்களைக் கொண்டு களமிறங்குகிறது. ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, சர்துல் தாக்கூர் ஆகியோர் இந்திய அணியில் களம் காண்கின்றனர். இதனால் இந்திய அணி மிடில் ஆர்டர்களை தவிர்த்து கடைசி நேர பேட்டிங் வரிசையையும் வலுப்படுத்தி உள்ளது.

வருகிற ஜூலை மாதம் 12ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவிருக்கிறது. அதுபோக ஒருநாள் போட்டி 20 ஓவர் போட்டி என இந்தத் தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தோற்ற இந்திய அணி மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்தத் தொடருக்காக தயாராகி வரும் வீரர்களுக்கு ராகுல் டிராவிட் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்..2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடர் அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கிறது. அதனால் இந்திய அணி இளம் வீரர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். வீரர்கள் அனைவரும் காயம் ஏற்படாதவாறு விளையாட வேண்டும் என்று கேப்டன் ரோகித் சர்மாவிற்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது.

Trending News