வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

மிரட்டும் 6 கீப்பர்களை கொண்ட இந்திய அணி.. மோங்கியாவையே நம்பி மோசம்போன 90’s காலகட்டம்

இந்திய அணி ஒரு காலத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு ரொம்பவும் திணறி வந்தது. அணிக்குள் நிறைய விக்கெட் கீப்பர்கள் வருவதும் போவதும் இருந்தனர். ஒரு நிலையான விக்கெட் கீப்பர் கிடைக்காமல் சௌரவ் கங்குலி மிகவும் கவலைப்பட்டார். முகமது அசாருதீன் காலத்தில் நயன் மோங்கியா மட்டுமே இந்திய அணியின் கீப்பராக வலம் வந்தார்.

வெறும் 20 மட்டுமே பேட்டிங் அவரேஜ் கொண்ட அவருக்கு மாற்று கீப்பர் இந்திய அணிக்கு அமையவே இல்லை என்றே கூறலாம். அதன்பின் பார்த்தீவ் பட்டேல் சிறிதுகாலம் விளையாடினாலும், அவரும் சோபிக்கவில்லை. அவருக்கு பின்னர் வந்தவர் தினேஷ் கார்த்திக், அவருடைய இடமும் தோனி வருகையால் பறிபோனது. ஆனால் தற்போதைய இந்திய அணியில் 6 விக்கெட் கீப்பர்கள் மிரட்டி வருகின்றனர்.

ரிஷப் பண்ட்: தோனிக்கு பின் இந்திய அணியில் ஒரு நிலையான இடத்தை பிடித்து வருகிறார் பண்ட். ஆனால் இப்போது உள்ள இந்திய அணியில் எவருக்குமே நிலையான இடம் கிடையாது. ஒரு போட்டியில் ரிஷப் பண்ட் சொதப்பினால் உடனே வேறு கீப்பரை இறங்கி விடுகின்றனர். அந்த அளவிற்கு இந்திய அணியில் விக்கெட் கீப்பர் குவிந்து கிடக்கின்றனர்.

கே எல் ராகுல்: இவரும் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். யாருக்காவது அடிபட்டால் இவர் மாற்று விக்கெட் கீப்பராக விளையாடுவார்

 இஷான் கிஷான்: 20 ஒரு போட்டிகளில் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துபார்த்தீவ் பட்டேல் இருக்கிறார் இஷான் கிஷான். இவரும் இந்திய அணியின் அசைக்க முடியாத கீப்பராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தினேஷ் கார்த்திக்: பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் மீண்டும் எழுந்து வரும் வீரர் தினேஷ் கார்த்திக். 37 வயதில் நான் ரிட்டயர்டு ஆக மாட்டேன் என வெளுத்து வாங்குகிறார். தோனி வந்ததால் இவருக்கு அப்பொழுது அணியில் இடம் கிடைக்கவில்லை. இப்பொழுது கலக்கிக் கொண்டிருக்கிறார்.

சஞ்சு சாம்சன்: கேரளத்திலிருந்து இந்திய அணிக்குள் புகுந்து தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் எதிரணி வீரர்களை அச்சுறுத்தி வரும் சஞ்சு சாம்சனும் ஒரு விக்கெட் கீப்பர் தான்.

விருத்திமான் சாஹா: டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட்த்திற்கு மாற்று கீப்பராக சாகா செயல்பட்டு வருகிறார். இவரும் 20 ஓவர் போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடுவதற்கு தவறுவதில்லை.

- Advertisement -spot_img

Trending News