ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Indian 2: கமலையே பயமுறுத்தும் அக்கடதேச ஹீரோ.. நூடுல்ஸ் போல் சிக்கலில் தவிக்கும் இந்தியன் 2

சங்கர் மற்றும் கமலின் பிரம்மாண்ட படமான இந்தியன் 2 ஜூன் மாத வெளியீடு என்று கூறியிருந்தார்கள். ஆனால் தேதியை மட்டும் அறிவிக்கவில்லை. போஸ்டரில் தேதியை மறைத்து விட்டு மாதத்தை மட்டும் அறிவித்து இருந்தனர். ஆனால் இப்பொழுது ஜூன் மாதம் கூட வெளி வருவதில் பெரிய சிக்கல் வந்துள்ளது.

இந்தியன் 2 கிட்டத்தட்ட ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளி வருகிறது. இந்த படத்தின் தமிழ் வெர்ஷனே இன்னும் முடிந்த பாடு இல்லை. அது முடிந்த பின்பு தான் மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும். ஆகையால் ஜூன் மாதம் வெளி வருவதில் பெரும் சிக்கல் நிலவி உள்ளது.

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப் போகும் பாட்டிற்கு லைக்காவிடம் சற்று நீதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இப்பொழுது இந்த படம் எப்படி பார்த்தாலும் ஆகஸ்ட் மாதம் தான் வெளிவரும். இன்னும் மூன்று மாதங்கள் நிச்சயமாக போஸ்ட் புரொடக்சன் வேலைகள் இருக்கும்.

அப்படி ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என்றால் சுதந்திர தினம் அன்று தான் ரிலீஸ் செய்வார்கள். ஆகஸ்ட் 15 அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் வெளியாக இருக்கிறது. அந்த படம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இப்பவே பல நூறு கோடிகள் பிசினஸ் ஆகி வருகிறது.

இந்தியன் 2 மற்றும் புஷ்பா 2 படங்கள் ஒரே நாளில் வெளிவந்தால் நிச்சயமாக கடும் போட்டி நிலவும், வேறு மொழி ஹீரோ கூட தமிழ் படங்களுக்கு கடும் போட்டி கொடுக்கிறார். இப்பொழுது இந்தியன் 2 டீம் மற்றும் லைக்கா என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்

Trending News