வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஆர்ஆர்ஆர், விக்ரம் படத்தை தட்டி தூக்கிய விஜய் சேதுபதி.. சர்வதேச அளவில் கிடைத்த அங்கீகாரம்

உலகத் திரைப்படங்களை தர வரிசைப்படுத்தும் இணையதளத்தில் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை வெளியான திரைப்படங்களில் டாப் 25 பட்டியலை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் உலகம் முழுவதும் திரையரங்கு மற்றும் ஒடிடி தளங்களில் வெளியான படங்களில் சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தரவரிசையில் முதல் இடத்தில் சீன மொழியில் வெளியான Everything everywhere all at once என்ற படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அடுத்ததாக மணிகண்டன் இயக்கத்தில் ஓடிடியில் வெளியான கடைசி விவசாயி படம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

விஜய் சேதுபதி, யோகிபாபு ஆகியோர் நடிப்பில் வெளியான கடைசி விவசாயி படம் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியிருந்தது. ஆனால் இந்தப் படம் வெளியான போது அந்த அளவுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது கடைசி விவசாயி படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சீன மொழி படம் 4.5 ரேட்டிங்கும், கடைசி விவசாயி படம் 4.3 ரேட்டிங்கும் பெற்றிருந்தது. இந்நிலையில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் 6வது இடத்தை பிடித்திருந்தது. இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அலியா பட் ஆகியோர் நடித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இன் விக்ரம் படம் 11வது இடத்தைப் பிடித்திருந்தது. உலகநாயகன் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் படம் வசூல் வேட்டையாடி வருகிறது.

இந்நிலையில் 1000 கோடி வசூல் செய்த ஆர்ஆர்ஆர் படத்தையும், 500 கோடி வசூல் செய்த விக்ரம் படத்தையும் பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது கடைசி விவசாயி. இப்படம் வெளியான போது அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும் தற்போது சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்தால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கடைசி விவசாயி மற்றும் விக்ரம் என இரண்டு படங்கள் டாப் 25 இடங்களில் வந்துள்ளதால் விஜய் சேதுபதி ரசிகர்கள் தற்போது உச்சகட்ட கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் பெரிய பட்ஜெட் படங்களை தாண்டி கடைசி விவசாயி படம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

Trending News