Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

இதுதாங்க ஒரிஜினல் சக்சஸ் மீட்.. விக்ரம் பட டீசரை போல் மிரட்டிய விருந்து

இதுதாங்க ஒரிஜினல் சக்சஸ் மீட்.. விக்ரம் பட டீசரை போல் மிரட்டிய விருந்து

லோகேஷ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியாகியிருக்கும் விக்ரம் படம் தற்போது வரை திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. சமீப காலமாக வெளியான படங்களில் இந்த அளவுக்கு எந்த படத்திற்கும் வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும், விக்ரம் படம் வசூலிலும் சக்கை […]

லோகேஷ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியாகியிருக்கும் விக்ரம் படம் தற்போது வரை திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. சமீப காலமாக வெளியான படங்களில் இந்த அளவுக்கு எந்த படத்திற்கும் வரவேற்பு கிடைக்கவில்லை.

மேலும், விக்ரம் படம் வசூலிலும் சக்கை போடு போட்டு வருகிறது. கமலின் படங்களில் அதிக வசூல் சாதனை செய்த படமாக விக்ரம் படம் அமைந்துள்ளது. இதனால் கமல் உச்சகட்ட சந்தோஷத்தில் உள்ளார். மேலும் விக்ரம் படக்குழுவுக்கு பரிசுகளை வாரி வழங்கி வருகிறார்.

ஆரம்பத்தில் விக்ரம் படத்தின் டீசர் வெளியானது. அதில் டைனிங் டேபிள் முழுக்க அசைவ உணவுகளை பரிமாறி அந்த டேபிளின் கீழே கைத்துப்பாக்கி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த காட்சி விக்ரம் படத்தில் இடம்பெறவில்லை.

ஆனால் இப்போது அதே போல் ஒரு பிரம்மாண்ட விருந்து கொடுத்துள்ளார் கமல். இதில் உதயநிதி, அனிருத், லோகேஷ் கனகராஜ் போன்ற அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். பிரியாணி, ப்ரோட்டா என தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்திருந்தார் உலகநாயகன் கமலஹாசன்.

அந்த விருந்தில் கலந்துகொண்ட எல்லார் முகத்திலும் ஒரு பூரிப்பு தெரிந்தது. அதாவது இதுதான் உண்மையான சக்சஸ் மீட் என அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அதாவது சமீபகாலமாக படங்கள் ஓடாவிட்டாலும் அதற்கு ஒரு சக்சஸ் மீட் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் விக்ரம் படம் உலக அளவில் 300 கோடியை தாண்டி வசூல் வேட்டை ஆடிய நிலையில் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால் உண்மையிலேயே விக்ரம் படம் தான் ஒரு பெரிய சக்சஸ் படம் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.