இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் பல நடிகர், நடிகைகளை உருவாக்கியுள்ளார். ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் நிறைய படங்களை பாலச்சந்தர் இயக்கியுள்ளார். அவருடைய படங்களில் அதிகம் பாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
அந்த காலகட்டத்தில் இளையராஜா உச்சத்தில் இருந்தார். அந்தச் சமயத்தில் வெளியான படங்களில் இளையராஜா இசை இல்லாத படங்களே இல்லை என்று கூட சொல்லலாம். இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இளையராஜாவிடம் கால்ஷீட் வாங்கிய பிறகுதான் படங்களின் வேலைகளை தொடங்குவார்கள்.
நடிகர், நடிகைகள் கூட முக்கியமில்லை இசை இளையராஜா என்றால் உடனே விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கி விடுவார்கள். அப்படிப்பட்ட காலத்திலும் பாலசந்தர் இளையராஜாவுடன் இணையவில்லை.
பாலச்சந்தர், இளையராஜா இருவரும் சிந்துபைரவி படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளார்கள். பாலச்சந்தர் இந்த மெட்டுக்கள் சரியில்லை என இளையராஜாவிடம் கூறியுள்ளார். ஆனால் அதையெல்லாம் இளையராஜா காதிலேயே வாங்கிக் கொள்ள மாட்டாராம்.
இதனால் கோபமடைந்த பாலசந்தர் உன் அளவிற்கு ஒரு ஆளை உருவாக்கிக் காட்டுகிறேன் என சபதம் விட்டுள்ளார். அதனால் இளையராஜா இல்லாத மூன்று படங்களை தன்னுடைய கவிதாலயா புரோடக்சன் தயாரிப்பு நிறுவனம் மூலம் உருவாக்கினார்.
அதில் அவர் இயக்கிய வானமே எல்லை, தயாரித்த அண்ணாமலை, ரோஜா படங்களில் இளையராஜா இல்லாத மற்ற இசையமைப்பாளர்களின் கொண்டு மிகப்பெரிய வெற்றி அடையச் செய்தார். இதில் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான ரோஜா படத்தில் ஏ ஆர் ரகுமானை பாலச்சந்தர் அறிமுகம் செய்துள்ளார். ஏ ஆர் ரகுமான் மூலம் தன் சபதத்தில் ஜெயித்த இளையராஜாவுக்கு இணையான இசையமைப்பாளரை பாலசந்தர் உருவாக்கியுள்ளார்.