இந்தியத் திரையுலகில் பிரம்மாண்டமான படைப்புகளுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி,தற்போது இயக்கி வரும் படம் ‘வாரணாசி’.மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் அப்டேட் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
வித்தியாசமான கதைக்களம்,பிரம்மாண்டமான காட்சிகள் மற்றும் உலகத் தரத்திலான தொழில்நுட்ப அம்சங்களுடன் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.
650 கோடி என்ற பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் வியாபாரம் தொடர்பாக தற்போது சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.குறிப்பாக,படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமங்களை விற்பனை செய்வதில் சில சவால்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.
பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படமென்பதால்,அதன் வியாபாரம் மற்றும் வசூல் தொடர்பான ஒவ்வொரு விஷயத்தையும் படக்குழு கவனமாகக் கையாண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில்,‘வாரணாசி’படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கதையின் பிரம்மாண்டம் மற்றும் படத்தின் நீளம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒரே படமாக வெளியிடுவதற்குப் பதிலாக இரண்டு பாகங்களாகப் பிரித்தால்,கதையை இன்னும் விரிவாகச் சொல்ல முடியும் என்பதுடன், வியாபார ரீதியாகவும் அது எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இருப்பினும்,ஏப்ரல் 7-ம் தேதியை வெளியீட்டு இலக்காகக் கொண்டு படக்குழுவின் திட்டமிடல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தப்படம் இந்திய சினிமாவின் அடுத்த பிரம்மாண்டப் படைப்பாக அமையுமா, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எந்த அளவுக்குப் பூர்த்தி செய்யும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.




