செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிரின்ஸ் படத்தால் சிவகார்த்திகேயனுக்கு ஹாட்ரிக் வெற்றியா, தோல்வியா? மரண பீதியில் வெளிவந்த முழு விமர்சனம்

அடுத்தடுத்து இரண்டு வெற்றி திரைப்படங்களை கொடுத்த சிவகார்த்திகேயனின் நடிப்பில் தற்போது பிரின்ஸ் திரைப்படம் வெளிவந்துள்ளது. மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்குமா இல்லையா என்பதை ஒரு விமர்சனத்துடன் இங்கு காண்போம்.

அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ், பிரேம்ஜி, சூரி, ஆனந்தராஜ் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. கதைப்படி ஹீரோவின் அப்பாவான சத்யராஜுக்கு தன்னுடைய பிள்ளைகள் காதல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

Also read:காமெடி கலாட்டாவாக வெளிவந்துள்ள சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்.. அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

ஆனாலும் அவர் காதலை எதிர்க்கிறார். இது ஒரு புறம் இருக்க பள்ளி டீச்சர் ஆக இருக்கும் சிவகார்த்திகேயன் பிரிட்டிஷ் பெண் மரியாவை காதலிக்கிறார். இந்த காதலுக்கு ஒட்டுமொத்த ஊரும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இறுதியில் இவர்களின் காதல் ஒன்று சேர்ந்ததா, சத்யராஜ் காதலை எதிர்ப்பதற்கு என்ன காரணம் என்பதை நகைச்சுவையோடு சொல்லி இருக்கிறது இந்த பிரின்ஸ்.

வழக்கமாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களில் காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடும். அதை மனதில் வைத்தே இந்த திரைப்படமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் முந்தைய படங்களில் ஒர்க் அவுட் ஆன இந்த விஷயம் பிரின்ஸ் திரைப்படத்தில் கொஞ்சம் கூட எடுபடவில்லை. அதிலும் படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்வது பார்ப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also read:அஜித், விக்ரமை பார்த்து ஜெர்க்காகி ரூட்டை மாற்றிய சிவகார்த்திகேயன்.. ஹாட்ரிக் வெற்றி பெறுமா பிரின்ஸ்

அது மட்டுமல்லாமல் படத்தின் மொத்த பாரத்தையும் சத்யராஜ் தான் தாங்குகிறார். அந்த அளவுக்கு அவருடைய கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது. ஆனாலும் ஹீரோவுக்கு இடம் தர வேண்டுமே என முதல் பாதியை சிவகார்த்திகேயனுக்கு ஒதுக்கி இருக்கிறார்கள். அதுதான் படத்தின் பலவீனமாக மாறி இருக்கிறது.

அதை தவிர்த்து பிரேம்ஜியின் கதாபாத்திரமும் படத்திற்கு முக்கியமானதாக இருக்கிறது. ஆனால் அவருக்கான ஒரு வாய்ப்பு படத்தில் தெளிவாக இல்லை. மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள பல கேரக்டர்கள் கதையோடு ஒட்டாதது போன்று இருப்பதும் ஒரு பெரிய குறையாக இருக்கிறது.

ஆக மொத்தம் காமெடி என்ற பெயரில் தேவையில்லாத வசனங்களையும், காதல் என்ற பெயரில் கடுப்பேற்றும் காட்சிகளையும், அதில் தேசப்பற்றையும் இடையில் நுழைத்து படம் பார்க்க வந்தவர்களை விழி பிதுங்க வைத்திருக்கிறது இந்த பிரின்ஸ். அந்த வகையில் சிவகார்த்திகேயனின் தீபாவளி வெளியீடாக வந்திருக்கும் இந்த பிரின்ஸ் நமுத்து போன பட்டாசாக இருக்கிறது.

Also read:ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயன்.. டிஆர்பிக்காக கெஞ்சும் சேனல்

சினிமா பேட்டை ரேட்டிங்: 1.5/5

Trending News