புதன்கிழமை, ஜனவரி 22, 2025

சுந்தரி சீரியல் நடிகை கோபிகாவா இது? எம்மாடியோ நீச்சல் உடையில் குளிர்காயும் புகைப்படம்

Sundari Serial Gopika: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தை பிடித்து மக்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சுந்தரி மற்றும் அணு கதாபாத்திரம் இந்த நாடகத்திற்கு ரொம்பவே முக்கியமான கேரக்டராக அமைந்தது. அதிலும் அணு கதாபாத்திரம் பணக்கார பெண்ணாக இருந்தாலும் குடும்பம் மற்றும் எதார்த்தமான ஒரு பெண் கேரக்டரில் இருந்தது.

அன்பே வா சீரியலில் நடிக்கிறார்

அதனாலேயே அனுவிற்கு மக்கள் அமோக வரவேற்பை கொடுத்து வந்தார்கள். மேலும் அணு இந்த நாடகத்தில் இறந்துவிட்டதாக இவருடைய கதை க்ளோஸ் செய்யப்பட்டது. அதனால் தற்போது அன்பே வா சீரியலில் வருனின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு நாடகத்திலுமே இவரை பார்க்கும் பொழுது குடும்ப குத்து விளக்காக தான் இருந்தார்.

Also read: வண்டியை மடக்கி பிடித்த முத்து.. மீனாவிற்கு கொட்டும் பணமழை, பிடுங்க நினைக்கும் மனோஜ்

ஆனால் அப்படிப்பட்ட அணுவை தற்போது நீச்சல் உடையில் பார்க்கும் பொழுது இது என்ன சுந்தரி சீரியலில் நடித்த அணுவா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இருக்கிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் ஸ்ரீ கோபிகா எப்போதுமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். அதனால் அடிக்கடி இவருடைய புகைப்படத்தை வெளியிட்டு வருவதால் எக்கச்சக்கமான ரசிகர்கள் இவரை பாலோ செய்து வருகிறார்கள்.

கோபிகாவின் புதிய புகைப்படம்

Sundari serial anu
Sundari serial anu

அதிலும் சமீப காலமாக இவர் வெளியிடும் புகைப்படம் ரொம்பவே கிளாமராக தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் இருக்கும் கிளாமர் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்.

அதில் கருப்பு நிற ஆடையில் ஸ்விம்மிங் டிரஸ்சை போட்டுக்கொண்டு, தலையில் கௌபாய் கேட் போட்டு, சன் கிளாஸ் போட்டு நீச்சல் உடையில் குளிர் காய்ந்து வருகிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களை அள்ளி குவித்து வைரல் ஆக்கிக் கொண்டு வருகிறார்கள். இன்னொரு பக்கம் சீரியலில் பார்க்கும் பொழுது தான் குடும்ப குத்து விளக்காக இருக்கிறார்.

ஆனால் நிஜத்தில் வெள்ளித் திரையில் நடிக்கும் நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு குட்டி உடையில் ஆட்டம் போட்டு வருகிறார் என்று கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

Also read: முத்துவின் 2 லட்ச ரூபாய் கனவை சுக்குநூறாக உடைக்க போகும் மச்சான்.. தனக்குத்தானே சூனியம் வைத்த விஜயா

Trending News