தெலுங்கானாவில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் என தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் அறிவித்துள்ளது. இன்னிலையில் அஜித் 61 படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதேபோல் கூடிய விரைவில் நெல்சன் இயக்கம் ரஜினிகாந்த் 169 இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் ஆரம்பிக்க இருக்கிறது. ஆனால் அங்கே பெரும் பிரச்சினை நிலவி வருகிறது. தயாரிப்பாளர்கள் மற்றும் ஹீரோக்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும்.
அவர்கள் குறைத்துவிட்டால் தியேட்டர்களின் கட்டணம் தானாக குறையும் என ஆகஸ்ட் 1-ஆம் தேதியிலிருந்து ஸ்ட்ரைக் செய்ய இருக்கிறார்கள். அதற்கு காரணம் தமிழ் நடிகர்கள் தான் என்று கூறுகின்றனர். தெலுங்கில் நடிகர்கள் வாங்கும் சம்பளம் தமிழ் நடிகர்களை விட குறைவுதான்.
இப்பொழுது சிவகார்த்திகேயன், சூர்யா, தனுஷ், விஜய் போன்றவர்களை வைத்து தெலுங்கு தயாரிப்பாளர்கள் படம் எடுக்கின்றனர். இவர்களுக்கு தெலுங்கு நடிகர்களை விட கோடிக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டியது இருக்கிறது.
ஏனென்றால் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் வாரிசு திரைப்படத்திற்காக விஜய் 100 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். சங்கர் இயக்கும் தெலுங்கு படத்தில் வில்லனாக நடிப்பதற்காக SJ சூர்யா 8 கோடியும், குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் சமுத்திரகனி ஒரு நாளைக்கு 4 லட்சமும் சம்பளம் வாங்குகிறாராம்.
இதனால் தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோக்களும் குணச்சித்திர நடிகர்களும் தங்கள் சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக பல தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த காரணத்தினால் தான் அவர்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ளும்படி ஸ்ட்ரைக் அறிவிக்கின்றனர்.