வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லியோ அப்டேட் வராததற்கு இதுதான் காரணமா? தல ஆடலாம் வாலு ஆடலாமா

Actor Vijay: பிரபலங்கள் வைத்து அடுத்தடுத்து படங்களை இயக்கி வெற்றி கண்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். தற்பொழுது இவர் விஜய் நடிப்பில் இயக்கும் லியோ படத்தின் அப்டேட்டை குறித்து வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

விஜய்யின் ஃபேமிலி என்டர்டைன்மென்ட் படத்திற்கு பிறகு களம் இறங்கும் கேங்ஸ்டர் படம் தான் லியோ. இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தட், மிஸ்கின், மன்சூர் அலிகான் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

Also Read: ஆணவத்தால் ஆடும் வடிவேலு.. மாமன்னன் தோல்வி, பகிர் கிளப்பிய பயில்வான்

இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட் இருக்கு காத்திருக்கும் ரசிகர்களை ஏமாற்றும் விதமாக சமீப காலமாக எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதைக் குறித்து பார்க்கையில் அப்டேட் கொடுக்க முன்வரும் லோகேஷ் கனகராஜிற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் தளபதி என்ற சர்ச்சையும் நிலவி வருகிறது.

இயக்குனரான லோகேஷ் கனகராஜுக்கு இருக்கும் ரசிகர்களை விட தமிழ் சினிமாவில் விஜய்க்கு உள்ள ரசிகர்களை ஏராளம். அவ்வாறு அப்டேட் குறித்த சர்ச்சை ஏற்பட்டிருந்தாலும், பிரபல ஹீரோவான விஜய்யின் சொல்லை கேட்கும் நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார்.

Also Read: சித்தார்தின் டக்கரை பின்னுக்கு தள்ளிய சரத்குமார்.. 2வது நாள் வசூலில் அதிரடி காட்டும் போர் தொழில்

விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களின் உத்தரவை கேட்கும் சூழலில் தான் அப்படத்தின் இயக்குனர்கள் இருந்து வருகின்றனர். ஏனென்றால் விஜய் சினிமாவில் கொண்ட அனுபவம் ஜாஸ்தி, மேலும் ஒரு இயக்குனரின் மகன் ஆவார். அதை தொடர்ந்து சுமார் 67 முதல் 68 படங்களை நடித்து வெற்றி கொண்டவர்.

இது போன்ற அனுபவம் கொண்டதால் இவர் போடும் கட்டளைக்கு அர்த்தம் உண்டு என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் படத்தில் ஒரு வித சஸ்பென்சை ஏற்படுத்தினால் மட்டுமே அவை வெற்றி பெறும். அதுமட்டுமில்லாமல் தற்பொழுது சென்னையில் எந்த ஒரு படப்பிடிப்பும் நடைபெறாததால் படத்தின் அப்டேட்டும் லீக் ஆகவில்லை என்பது முக்கிய காரணமாக முன்வைக்கப்படுகிறது.

Also Read: லியோ டைட்டிலால் விஜய்க்கு வந்த புது தலைவலி.. ஃப்ரீயா உருட்டுர விளம்பரமா இருக்கே!

Trending News