சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

IPL: எல்லை மீறி சண்டையிட்ட சஞ்சு சாம்சன்.. அம்பையர் மீது பாய்ந்த சங்ககாரா

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. முதலில் விளையாடிய டெல்லி 221 ரன்கள் அடித்து இமாலய இலக்கை நிர்ணயித்தது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இரு அணிகளும் போராடிக் கொண்டிருக்கிறது.

இந்த ஐபிஎல் போட்டியில் ஒரு அணி 14 முறை மற்ற அணிகளுடன் விளையாட வேண்டும். பத்து அணிகளில், புள்ளிகள் அதிகம் பெற்ற முதல் நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். எல்லா அணியும் 11 போட்டிகள் விளையாடி உள்ளது.

அம்பையர் மீது பாய்ந்த சங்ககாரா

கே கே ஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏற்கனவே பதினாறு புள்ளிகள் பெற்று கிட்டத்தட்ட தங்களது பிளே ஆப் தகுதியை உறுதி செய்துள்ளது. எல்லா அணிகளும் இன்னும் இரண்டு மற்றும் 3 போட்டிகள் விளையாட உள்ளது.

மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப், பெங்களூர், குஜராத் ஆகிய அணிகள் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்த 4 அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் பிளே ஆப் சுற்றுக்கு எந்தெந்த அணி செல்லும் என்பது உறுதியாகி விடும்.

நேற்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடி கொண்டு இருக்கும் வரை டெல்லி அணியின் வெற்றி கேள்விக்குறியாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் எளிதாக வெற்றி பெறும் என்ற நிலைக்கு கொண்டு வந்தார் சாம்சன். சற்றும் எதிர்பாராமல் அவர் அவுட் ஆனதும் போட்டி டெல்லி பக்கம் வந்தது.

16-வது ஓவரில் சாம்சன் மூன்றாவது அம்பையரால் சர்ச்சைக்குரிய விதமாக அவுட் கொடுக்கப்பட்டார். எல்லைக்கோட்டுக்கு அருகில் பந்தை பிடித்த சாய் ஹோப் கோட்டை மிதித்தது போல் தெரிந்தது. ஆனால் அம்பையர்கள் அவுட்கொடுத்தனர். இதற்கு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சாம்சன். அணியின் பயிற்சியாளர் சங்ககாராவும் நடுவர்கள் மீது பாய்ந்தார்.இந்த சண்டையால் சாம்சன் சம்பளத்தில் 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

Trending News