சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

குணசேகரனின் கொட்டத்தை அடக்க ஈஸ்வரி எடுக்க போகும் முடிவு.. யார் கொடுத்த தைரியம் தெரியுமா?

Ethirneechal:சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் ஆணவத்தையும், திமிரான பேச்சையும் ஒட்டுமொத்தமாக அடக்குவதற்கு ஈஸ்வரி தயாராகி விட்டார். அதாவது சாரு பாலாவை எதிர்த்து நிற்பதற்காக ஈஸ்வரியை பகடைக்காயாக பயன்படுத்தி எலக்ஷனில் நிற்க வைத்தார். ஆனால் இதில் ஈஸ்வரி ஜெயித்தால் இவருடைய முன்னேற்றத்திற்கு பக்க பலமாக இருக்கும் என்று சாரு பாலா நினைக்கிறார்.

அதற்காக எஸ்கேஆர் இடம் நான் எலக்ஷனில் இருந்து வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்கிறார். இதை கேள்விப்பட்ட குணசேகரன், சாருபாலா எலெக்ஷனில் நிற்கவில்லை என்றால் நானே நிற்கிறேன். அதனால் ஈஸ்வரி நாளைக்கு என்னுடன் வந்து நானும் வாபஸ் வாங்குகிறேன் என்று கையெழுத்து போட வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் ஜனனி நாம் தேடி போன வாய்ப்பை குணசேகரன் கெடுத்துவிட்டார்.

அதனால் நம்மை தேடி வந்த வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்தி ஜெயித்துக் காட்டினால் மட்டுமே நம்மால் வெற்றி பெற முடியும் என்று ஈஸ்வரிக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக பேசுகிறார். அடுத்ததாக ஈஸ்வரியை குணசேகரன் கூட்டிட்டு போகும் பொழுது போலீஸ் ஸ்டேஷனில் இருந்து விசாரணைக்காக இவர்களை வரச் சொல்கிறார்கள். அதனால் குணசேகரன், நந்தினி ரேணுகா ஈஸ்வரி நீங்கள் மூவரும் சென்று கையெழுத்து போட்டு வாபஸ் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுகிறார்.

Also read: எதிர்நீச்சல் குணசேகரன் கதாபாத்திரத்திற்கு வாங்கும் சம்பளம்.. தெனாவட்டு காட்டும் வேல ராமமூர்த்தி

இதனால் நந்தினி மற்றும் ஈஸ்வரி அங்கே போகிறார்கள். போன இடத்தில் கணவனை இழந்து தனியாக போராடி குடும்பத்தை வழிநடத்த வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெண்ணுக்கு நடக்கும் அநியாயத்தை பார்க்கிறார். அடுத்து கையெழுத்து போடும்போது இந்த ஒரு விஷயம் தான் ஈஸ்வரிக்கு வந்துட்டு போகுது. நாம் ஜெயித்தால் இந்த மாதிரி கஷ்டப்படும் பெண்களுக்கு ஒரு ஆதரவாக இருக்கும் என்று முடிவு பண்ணுகிறார்.

அதனால் கையெழுத்து போடும் கடைசி நிமிடத்தில் மனதை மாற்றிக் கொண்டு திரும்பி வந்து விடுகிறார். அந்த வகையில் ஈஸ்வரி இந்த எலெக்ஷனில் ஜெயித்து குணசேகரனின் கொட்டத்தையும், இவரை போல் அராஜகம் பண்ணும் ஆண்களின் திமிரையும் அடக்கப் போகிறார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றி பெறுவதற்கு இந்த ஒரு பதவி ஈஸ்வரிக்கு கை கொடுக்கப் போகிறது.

இந்த மாதிரி ஈஸ்வரி துணிச்சலுடன் வரவேண்டும் என்பதுதான் அப்பத்தாவின் கனவாக இருந்தது. அதனால் அப்பத்தா கொடுத்த தைரியத்தால் ஜெயித்து காட்டப் போகிறார். அடுத்ததாக ஜீவானந்தத்தை எப்படியாவது ஜாமீன் எடுத்து அப்பத்தாவின் இறப்பிற்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கும் விதத்தில் சாறுபாலா மற்றும் ஜனனி ஜெய்த்து காட்டப் போகிறார்கள்.

Also read: பிரேம் டைமில் கொடிக்கட்டி பறக்கும் சன் டிவி சேனல்.. எதிர்நீச்சல் காலை வாரி விட்டாலும் கெத்தா இருக்கும் சீரியல்

Trending News