வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

படம் எடுக்குறது ஈசி அதை ரிலீஸ் பண்றது கஷ்டம்.. ரஜினி படத்திற்கே இப்படி ஒரு சோதனையா

படத்தின் கதைக்கு ஏற்ப ஹீரோ, ஹீரோயின்களை தேர்ந்தெடுத்து இயக்குவதும், தயாரிப்பதும் என்பது பெரிய விஷயம். இருப்பினும் அதைவிட அப்படங்களை ரிலீஸ் செய்வதற்கு ஏற்படும் சிரமம் பெரிதாக உள்ளது. இது போன்ற பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் படங்களில் ரஜினி படமும் உள்ளது என்பது மிகுந்த மனவருத்ததை உண்டுபடுத்தி வருகிறது.

முந்தைய காலகட்டத்தில் சினிமாவை பொறுத்தவரை ஒரு ஆண்டிற்கு சுமார் 6 முதல் 7 படங்கள் மட்டுமே வெளியாகும். அதைத்தொடர்ந்து அப்படங்கள் வெளிய வரும் தேதிகளை தாங்களே முடிவு செய்து கொள்ளும் நிலைமையில் இருந்தார்கள். ஆனால் தற்போதைய நிலைமையோ தலை கீழாக மாறிவிட்டது என்றே கூறலாம்.

Also Read: தாராளமாக கவர்ச்சி காட்ட ஒரு கோடி சம்பளம்.. விஷால் பட மில்க் பியூட்டி செய்த மட்டமான வேலை

குறிப்பாக பார்க்கையில் படங்களை எடுக்க ஏற்படும் சிரமங்களை விட படங்களை ரிலீஸ் செய்யும் தேதிக்காக காத்திருப்பது மிக பெரிய விஷயமாக போய்க் கொண்டிருக்கிறது. பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் என்றாலே அது பொங்கல், தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் வெளியாகும் என்பது தெரிந்த ஒன்று.

இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் ஜெயிலர் படம் தற்பொழுது சிக்கலை எதிர்கொண்டு வருவதாக வெளிவந்த தகவல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற பிரச்சனையின் முன் ஏற்பாடாக லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்க இருக்கும் படமான லியோ படத்தின் தொடக்கத்திலேயே தன் பட ரிலீஸ் டேட்டை வெளியிட்டாரோ என்பதை நினைவு படுத்துகிறது.

Also Read: கமலிடம் தோற்றுப் போனதை ஏற்றுக் கொள்ளாத ரஜினி.. கொடுத்த அடியால் எழுந்திருக்க முடியாமல் போன உலக நாயகன்

தற்போதைய தமிழ் சினிமாவின் நிலைமை பட பிடிப்பை தொடங்குவதற்கு முன்னரே உஷாராக ரிலீஸ் தேதியை அறிவித்திட வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் ஏதாவது தொடர் விடுமுறை நாட்களைக் கொண்டு பட வெளியீட்டை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றனர். இதில் எந்த ஒரு செண்டிமெண்டுக்கும் இடம் இல்லை என்பதை திட்டவட்டமாகிவிட்டது.

இது போன்ற பிரச்சனையில், தன் தலைவன் ரஜினிக்கு ராசியான மாதம் செப்டம்பர் தான் அவ்வாறு இருக்கையில் தற்பொழுது ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகுவதில் உடன்பாடு இல்லை என்ற கருத்தை வெளியிட்டு வருகின்றனர் ரசிகர்கள். இத்தகைய முரண்பாடான சூழ்நிலையில் ஜெயிலர் படம் ரஜினிக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read: பிரபல நடிகரை பதம் பார்க்க தயாரான பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.. நெட்டிசன்கள் பேச்சுக்கு பதிலடி

Trending News