சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

ஜடேஜாவிற்கு கிடைக்கப்போகும் புது அந்தஸ்து.. வெளிப்படையாக உண்மைய சொன்ன ரோஹித்

இலங்கை அணி இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடக்கவிருக்கிறது.

இந்நிலையில் நேற்று நடந்த முதல் போட்டியில் இலங்கை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி எளிதாக வீழ்த்தியது. இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு 199 ரன்கள் குவித்தது.

வருகிற 20 ஓவர் உலகக்கோப்பைகாக இந்திய அணி பல யுக்திகளை இந்த தொடரில் மேற்கொள்ளவிருக்கிறார். அதை பயன்படுத்தி நேற்று நடந்த முதல் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது.

ரோஹித் சர்மா இந்திய அணியில் இளம் வீரர்களை சுழற்சி முறையில் அணியில் இடம்பெற செய்து வருகிறார். இவ்வாறு வீரர்களை சுழற்சி முறையில் இடம்பெற செய்வது உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணிக்கு சிறந்த வீரர்களை தேர்வு செய்யும் நோக்கமாகும்.

நேற்றைய போட்டியில் கோலி, பண்ட், சூரியகுமார் யாதவ் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல் இந்திய அணி களம் இறங்கியது.இலங்கை அணியை துவம்சம் செய்தது மட்டுமல்லாமல் அபார வெற்றியும் பெற்றது.

இசான் கிசான், சஞ்சு சாம்சன், தீபக் கூடா, வெங்கடேச ஐயர், ஹர்சல் பட்டேல் போன்ற வீரர்களுக்கு நேற்று வாய்ப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டு அவர்களை தேர்வு போட்டியாக இதை எடுத்துக் கொண்டது.

மேலும் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங் சமீபகாலமாக அதிரடியாக இருக்கிறது. பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் ஜடேஜாவுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். டேஜா 2வது அல்லது 3வது வீரராக களமிறங்கபடுவார் எனவும் உறுதியளித்துள்ளார் கேப்டன் ரோகித்.

- Advertisement -spot_img

Trending News