சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

மறுபடியும் அதே கெட்டப்பா.? ஜெய் பீம் இயக்குனருடன் தலைவர் 170 டைரக்டரையும் தேர்வு செய்த கதை இதுதான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் தயாராகி வருகிறது. அடுத்ததாக ரஜினி நடிக்கும் தலைவர் 170 படத்தை, ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த.செ. ஞானவேல் இயக்கி, லைக்கா புரொடக்ஷன் தயாரிக்க உள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.

தலைவர் 170 படத்தை இயக்குவதற்கு நிறைய முன்னணி இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்தாலும், ஜெய் பீம் பட இயக்குனரின் கதை ரஜினிக்கு மிகவும் பிடித்து போனதால், அவர்தான் படத்தை இயக்க வேண்டும் என அடம் பிடித்திருக்கிறார். அதிலும் இந்த படத்தில் ரஜினி மறுபடியும் அதே கெட்டப்பில் நடிக்க உள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இந்தப் படமும் ஜெய் பீம் போன்று உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

Also Read: ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினி இணையும் பிரம்மாண்ட கூட்டணி.. அதிகாரப்பூர்வமாக வெளிவந்த தலைவர்-170 அறிக்கை

இதில் ரஜினி போலீஸ் கெட்டப்பில் மிரட்ட போகிறார். இந்தப் படத்தில் ரஜினியுடன் பல முன்னணி நடிகர்களும் இணைந்து நடித்து மிகப்பிரமாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். அதிலும் உண்மை சம்பவங்களை படமாக்குவதில் கெட்டிக்காரராக இருக்கும் ஞானவேல் ‘தலைவர் 170’ படத்திலும் ரஜினியை வைத்து ஒரு சம்பவம் செய்ய காத்திருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக ரஜினியின் 171-வது படத்தை கைப்பற்றும் ரேஸில் மூன்று இயக்குனர்கள் இருந்தனர். இந்த 3 இயக்குனர்களில் ஒருவருடைய கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துப் போனதால் தலைவர் 171 வது படத்தின் இயக்குனரையும் இப்பவே முடிவு செய்துவிட்டாராம்.

Also Read: சூப்பர் ஸ்டார் சம்பளத்தில் கிள்ளி கொடுத்த சன் பிக்சர்ஸ்.. ஜெயிலர் படத்தில் விஜய் வில்லன் வாங்கிய சம்பளம்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி மற்றும் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி மற்றும் லவ் டுடே படத்தை நடித்து இயக்கிய பிரதீப் ரங்கநாதன் மூவரின் ரஜினியிடம் கதை சொல்லி உள்ளனர். ஆனால் இவர்களுள் பிரதீப் ரங்கநாதனின் கதை ரஜினிக்கு மிகவும் படித்து போனதால் சமீபத்தில் அவரை சந்தித்து பேசினார். ஆகையால் நிச்சயம் தலைவர் 171 வது படத்தை பிரதீப் ரங்கநாதன் தான் இயக்கப் போகிறார்.

இதனை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட், லைக்கா, சன் பிக்சர்ஸ் போன்ற மூன்று முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஏதாவது ஒரு நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு நல்ல நாளில் விரைவில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. ஜெயிலர் படத்திற்கு பின் ‘தலைவர் 170’ அதன் பின் ‘தலைவர் 171’ என ரஜினிகாந்த் நடிக்கும் படங்களின் இயக்குனர்களை சூப்பர் ஸ்டார் கச்சிதமாக தேர்வு செய்து தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

Also Read: மீண்டும் பற்றி எரியும் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து.. விஜய்யை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய நடிகர்

Trending News