திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

525 கோடியை தாண்டிய ஜெயிலர் வசூல்.. கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடிய முத்துவேல் பாண்டியனின் புகைப்படம்

Jailer Success Party: நெல்சன் இயக்கத்தில் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தான் ஜெயிலர். பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்கள் பெற்றதால் ரஜினி நெல்சனை தனது படத்தை இயக்க சம்மதிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனாலும் நெல்சன் மீது முழு நம்பிக்கை வைத்து ஜெயிலர் படத்தை அவர் தான் இயக்க வேண்டும் என்று ரஜினி கூறிவிட்டார்.

இதற்காக இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்து இமாலய வெற்றியை கொடுத்திருக்கிறார் நெல்சன். ஜெயிலர் படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியனாக ரஜினி மாஸ் காட்டி இருக்கிறார். அதேபோல் கேமியோ தோற்றத்தில் நடித்த மற்ற மொழி நடிகர்களும் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறார்கள். அதிலும் சிவராஜ்குமாருக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Also Read : லோகேஷை பின்னுக்கு தள்ள ஷங்கர் எடுக்கப் போகும் ஆயுதம்.. ரஜினி, கமல் கூட்டணியில் புது முயற்சி

இந்தப் படம் வெற்றியான முதல் வாரத்திலேயே பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் ஜெயிலர் படத்தில் பின்னால் பணியாற்றிய பலர் கலந்து கொண்ட நிலையில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன் போன்ற பிரபலங்கள் வரவில்லை. ஆனால் நேற்றைய தினம் சன் பிக்சர்ஸ் ஜெயிலர் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது.

அதன்படி தற்போது வரை கிட்டத்தட்ட 525 கோடிக்கும் அதிகமாக ஜெயிலர் படம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அதில் ரஜினி கேக் வெட்டும் புகைப்படம் இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.

Also Read : முதல் நாள் முதல் ஷோவில் மண்ணை கவ்விய ரஜினி, கமலின் படங்கள்.. ஹைஃபை ஏற்றி படுதோல்வியான சம்பவம்

ரஜினியின் முந்தைய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் ஜெயிலர் படம் வாழ்வா, சாவா என்ற நிலையில் தான் இருந்தது. ஏனென்றால் இதற்குப் பிறகும் தோல்வி படங்களை தொடர்ந்து கொடுத்தால் அவரது சினிமா கேரியர் ஆட்டம் கண்டுவிடும். ஆனால் துணிந்து இறங்கிய முத்துவேல் பாண்டியன் சாதித்துக் காட்டிவிட்டார்.

மேலும் ஜெயிலர் கொடுத்த வெற்றியின் உத்வேகத்தால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பரபரப்பாக ரஜினி செயல்பட இருக்கிறார். அதன்படி தலைவர் 170 படத்தின் பூஜை இன்று நடைபெற உள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்பை தொடங்க படக்குழு மும்மரம் காட்டி வருகிறது.

கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடிய முத்துவேல் பாண்டியனின் புகைப்படம்

jailer-success-party
jailer-success-party

Also Read : கறி சோறு போடுறேன்னு ஏமாற்றிய ரஜினி.. 500 கோடி வசூல் செஞ்சாலும் இந்த விஷயத்துல கஞ்ச பிசுநாரியாம்

Trending News