வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஜெயிலரின் ஒரு மாத வசூலை வெளியிட்ட ஹாலிவுட் பத்திரிக்கை.. ஜவானை பின்னுக்கு தள்ளிய ரஜினி

Jailer, Jawaan: இப்போது திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது ஷாருக்கானின் ஜவான் படம். அட்லீ முதல் முறையாக பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்த நிலையில் தன்னுடைய முதல் படத்தில் மாபெரும் வெற்றியை கண்டிருக்கிறார். இந்த படம் இப்போது வசூலை வாரி குவித்து வருகிறது.

இந்த சூழலில் வெரைட்டி என்ற பிரபல ஹாலிவுட் பத்திரிக்கை நிறுவனம் இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களின் விவரங்களை வெளியிட்டு உள்ளது. அதில் ஜவான் படத்தை பின்னுக்கு தள்ளி ஜெயிலர் படம் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ரஜினி நடிப்பில் ஜெயிலர் படம் வெளியாகி இருந்தது.

Also Read : லோகேஷுக்கு அட்லீய விட கம்மியா சம்பளம் கொடுத்து கரெக்ட் செய்த சன் பிக்சர்ஸ்.. காப்பி கதை செய்யும் ஸ்மார்ட் வொர்க்

இதுவரை தமிழ் சினிமாவில் செய்த வசூல் சாதனை அனைத்தையும் முறியடித்து இப்படம் அதிக வசூல் செய்தது. இதன் காரணமாக சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ஜெயிலர் படத்தில் பணியாற்றிய பிரபலங்களுக்கு தங்க காசு பரிசாக வழங்கினார். மேலும் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு காரையும் பரிசாக கொடுத்திருந்தார்.

இப்போது ஒரு மாதத்தை கடந்த நிலையில் ஜெயிலர் படம் 635 கோடி வசூல் செய்துள்ளது. அந்த வகையில் இந்தியாவிலேயே முதலாவதாக அதிக வசூல் செய்த படமாக ஷாருக்கானின் பதான் படம் இருக்கிறது. இந்த படம் 130 மில்லியன் வசூல் செய்து முதலிடத்தை வகிக்கிறது. அடுத்ததாக சன்னி லியோன் படம் தான் இரண்டாம் இடத்தை பெற்று இருக்கிறது.

Also Read : லோகேஷ், ரஜினி படத்திற்கு எதிராக தயாராகும் தரமான படம்.. சன் பிக்சர்ஸ் செய்த துரோகத்தால் ஏற்பட்ட விளைவு

அதாவது கார்டர் 2 படம் 81 மில்லியன் வசூல் செய்த நிலையில் அடுத்ததாக ரஜினியின் ஜெயிலர் படம் 76.6 மில்லியன் வசூல் செய்திருக்கிறது. மேலும் செப்டம்பர் 7 அன்று வெளியான ஜவான் படம் மிகக் குறுகிய காலத்திலேயே நான்காவது இடத்தை பெற்றிருக்கிறது. இப்போதும் இந்த படம் வசூல் மழையில் நனைந்து வருகிறது.

இன்னும் சில வாரங்களில் மற்ற படங்களின் வசூலை முறியடித்து முதல் இடத்தை ஜவான் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முதல் இடத்தில் ஷாருக்கானின் பதான் படம் தான் இருப்பதால் தன்னுடைய சாதனையை முறியடிக்க தயாராகி வருகிறார். மேலும் இந்த பட்டியலில் மற்ற மொழி படங்கள் அதிகம் இடம் பெற்று இருந்த நிலையில் ஜெயிலர் முக்கிய இடத்தை பிடித்து இருப்பது கோலிவுட் சினிமாவுக்கு பெருமையை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read : 70களிலிருந்து இன்று வரை தமிழ் சினிமாவின் 5 ஜென்டில்மேன்ஸ்.. கண்ணியம் தவறாத ரஜினியின் நண்பர்

Trending News