திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இந்த 3 படங்களின் மொத்த கலவைதான் ஜெயிலர்.. கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி தட்டி தூக்கிய நெட்டிசன்கள்

Jailer Movie: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசாக இருக்கும் படம் தான் ஜெயிலர். இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த பிறகு சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் மனசே விட்டு போச்சு. ஏனென்றால் அந்த அளவிற்கு நெல்சன் இந்த படத்தை கமலஹாசனின் விக்ரம் படத்தின் ரீமேக் போல் எடுத்து வைத்திருக்கிறார்.

இது ஜெயிலரா இல்ல விக்ரம் ரீமேக்கா! என பலரும் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்புகின்றனர். அது மட்டுமல்ல சிவகார்த்திகேயன் நடிப்பில் 100 கோடி வசூலை குவித்த நெல்சனின் டாக்டர் மற்றும் தளபதி விஜய் வைத்து நெல்சன் எடுத்த பீஸ்ட், கமலஹாசனின் விக்ரம் போன்ற மூன்று படங்களின் கலவையாகத்தான் ஜெயிலர் தெரிகிறது.

Also Read: இது ஜெயிலரா இல்ல விக்ரம் ரீமேக்கா.. இப்படி வசமா மாட்டிக்கிட்டீங்களே நெல்சன்!

அதிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த விக்ரம் படத்தில் தந்தை, மகன், பேரன் போன்ற மூன்று பேரின் கனெக்சன் அப்படியே ஜெயிலர் படத்திலும் தெரிகிறது. விக்ரம் படத்தில் கமலஹாசன் கைக்குழந்தையை பேரனாக கையில் வைத்திருந்தார்.

ஆனால் ஜெயிலர் படத்தில் 5 வயது சிறுவனை ரஜினி பேரனாக கையில் வைத்துக்கொண்டு தன்னுடைய பழிவாங்கும் படலத்தை விரித்து இருக்கிறார். இந்த இரண்டு படங்களும் ஒரே மாதிரியான தான் தெரிகிறது.

Also Read: ஓரளவுக்கு மேல நம்ம கிட்ட பேச்சே கிடையாது, வீச்சு தான்.. லியோவை மொத்தமாய் முடித்துவிட்ட ஜெயிலர் வீடியோ

ஏற்கனவே அண்ணாத்த படத்தின் மூலம் பெரிய ஏமாற்றத்தை கொடுத்த ரசிகர்களுக்கு ஜெயிலர் படத்தை விருந்தாக அமையும் என சூப்பர் ஸ்டார் நினைத்தார். ஆனால் ஜெயிலர் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த பிறகு டாக்டர், பீஸ்ட், விக்ரம் போன்ற படங்களை ஒன்றாக சேர்த்து மொத்த கலவையாகத்தான் நெல்சன் ஜெயிலரை உருவாக்கி இருக்கிறார்.

இந்த விஷயத்தை நெட்டிசன்கள் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றி எப்படியோ ட்ரெய்லரை பார்த்து கண்டுபிடித்து விட்டனர். ரிலீசுக்கு முன்பே இந்த நிலைமை என்றால் ரிலீசுக்கு பின் இன்னும் என்னென்ன ஆகப் போகிறதோ என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் பதறுகின்றனர்.

Also Read: ஜெயிலர் ஜெயிச்சா இதெல்லாம் தான் காரணம்.. விஜய்யை பெருமையாக பேசி சூப்பர் ஸ்டாரை அசிங்கப்படுத்தும் பிரபலம்

Trending News