Jailer Actors Salary: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் உலகம் முழுவதும் வெறும் 12 நாட்களில் 510 கோடி வசூலை வாரிக் குவித்திருக்கிறது. அதையெல்லாம் வைத்து பார்க்கும் போது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு 130 கோடி சம்பளத்தை வாரி இறைத்ததெல்லாம் பெரிய விஷயமே இல்லை.
தற்போது ஜெயிலர் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளின் சம்பள விபரம் வெளியாகி உள்ளது. இதில் வில்லனாக ரஜினியை மிரள செய்தும் ஆடியன்ஸை அலற செய்தும் நடிப்பில் வெளுத்து வாங்கிய விநாயகனுக்கு, காமெடி நடிகர் யோகி பாபுவை விட மூன்று மடங்கு சம்பளம் கம்மியாக கொடுத்தது எந்த விதத்தில் நியாயம் என இந்த சம்பள பட்டியலை பார்த்தபின் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
ஏனென்றால் காமெடி நடிகரான யோகி பாபுவிற்கு ஜெயிலர் படத்தில் 1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முரட்டு வில்லனாக நடிப்பில் மிரட்டி விட்ட வர்மன் கேரக்டரில் நடித்த நடிகர் விநாயகனுக்கு வெறும் 35 லட்சம் மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் உண்மையாகவே சம்பவமே அவர வச்சு தான். ஆனால் அந்தப் படத்தில் காமெடி நடிகராக நடித்த யோகி பாபுவிற்கு வர்மனை விட மூன்று மடங்கு அதிகமாக சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவியாக நடித்த ரம்யா கிருஷ்ணனுக்கு 80 லட்சமும், ரெடின் கிங்ஸ்லி 25 லட்சமும், நடிகர் சுனிலுக்கு 60 லட்சமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக ரஜினியின் மகனாக நடித்த வசந்த் ரவிக்கு 35 லட்சமும், தமன்னா 3 கோடியும், ஜாக்கி ஷெராப் 4 கோடியையும் சம்பளமாக பெற்று இருக்கிறார். இவர்களுடன் படத்தில் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே வந்த மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஜெயிலர் படத்திற்காக 8 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார்.
அதேபோல் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு 4 கோடியும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 110 கோடியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு மொத்தமாக ஜெயிலர் பட நடிகர் நடிகைகளுக்கு மட்டும் சம்பளமாக சன் பிக்சர்ஸ் 130 கோடிகளை வாரி இறைத்திருக்கிறது. இதெல்லாம் ஜூஜூபி தான். ஏனென்றால் அந்த அளவிற்கு உலக அளவில் இந்தப் படத்தின் வசூல் பின்னி பெடல் எடுத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் இதில் வில்லனாக நடித்த வர்மனுக்கு மட்டும் குறைவாக சம்பளம் கொடுத்திருப்பதை காட்டமாக விமர்சிக்கின்றனர். ஜெயிலர் படத்திற்கு பின் வர்மனாக நடித்த விநாயகத்தின் ரேஞ்சே எங்கேயோ போய்விட்டது. இனி அவர் அடுத்தடுத்த படங்களில் சம்பளத்தில் கராராக இருப்பார்.