Jailer: சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்த ஜெயிலர் இன்று திரையரங்குகளை அலங்கரித்துள்ளது. ரஜினி நடிப்பில் சிறு இடைவெளிக்குப் பிறகு வெளியாகி உள்ள இப்படம் இப்போது தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது.
படம் வெளி வருவதற்கு முன்பு சில விஷமிகளால் நெகட்டிவ் கருத்துக்கள் பரப்பப்பட்டிருந்தாலும் தற்போது படம் பார்த்த அனைவரும் சொல்லும் ஒரே விஷயம் தலைவர் வேற லெவலில் பின்னி இருக்கிறார் என்பதுதான். அந்த வகையில் நெல்சன் சூப்பர் ஸ்டாரின் ரசிகனாக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் அவர் இப்படத்தில் இறக்கி இருக்கிறார். இப்படி பல பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் இப்படத்தில் நிறைகளும், குறைகளும் இருக்கத் தான் செய்கிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டாரின் நடிப்பு படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.
ஒரு குடும்பஸ்தனாகவும், தன் மகனுக்காக ஆக்ரோஷ அவதாரம் எடுப்பது என சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்திருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக அனிருத் வேற லெவலில் கலக்கி இருக்கிறார். அவருடைய இசை ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கிறது. அதிலும் தலைவர் அலப்பறை நிஜமான அலப்பறை தான்.
அதேபோன்று ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் போன்ற நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருக்கின்றனர். அதைத்தொடர்ந்து இடைவேளை காட்சி, பிளாஷ்பேக், கிளைமேக்ஸ் என ஒவ்வொன்றிலும் ஆக்சன் அதிரடியாக தூள் பறக்கிறது.
இப்படி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசம் கவர்ந்த ஜெயிலரில் சிறு குறையும் இருக்கத்தான் செய்கிறது. அதாவது முதல் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. மேலும் சில லாஜிக் குறைபாடுகள் அங்கங்கு தென்படுகிறது. ஒரு சில காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் மொத்தத்தில் இந்த ஜெயிலர் சரவெடியாக பட்டையை கிளப்பி இருக்கிறார்.
Also read: ஜெயிலர் விமர்சனத்திற்கு தயாரான ப்ளூ சட்டை.. ஒத்த வரியில் கொடுத்த கமெண்ட், நெல்சா மண்ட பத்திரம்