வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஜெயிலர் பட வர்மனுக்கு சோறு போட்ட தொழில்.. திறமையை கண்டுபிடித்து வாய்ப்பு வழங்கிய வாரிசு நடிகர்

Jailer Movie Actor: நெல்சன்- சூப்பர் ஸ்டார் கூட்டணியில் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்தில், ரஜினியை மிரளச் செய்தும் ஆடியன்சை அலறச்செய்தும், நடிப்பில் வெளுத்து வாங்கியவர் ஜெயிலர் விநாயகன். மரியானுக்கு பின் இவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 10 வருடங்கள் நடிக்கவில்லை.

ஏனென்றால் இவருக்கு தமிழை விட மலையாளத்தில் நிறைய பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருப்பதால் மோலிவுட் பக்கம் சாய்ந்து விட்டார். ஆரம்பத்தில் இவரை மலையாள சினிமா கூட்டத்தில் கோவிந்தா போடும் குரூப் ஆர்ட்டிஸ்ட் ஆக தான் பார்த்துள்ளனர். ஆனால் இவரிடம் இருக்கும் அந்த திறமையை கண்டு இவரை ஒரு மாஸ் நடிகன் ஆக்கியது அந்த வாரிசு நடிகர் தான்.

Also Read: தலையை சுற்ற வைக்கும் ஜெயிலர் வர்மனின் சம்பளம்.. ஒரே படத்தால் எகிறிய மார்க்கெட்

சினிமாவில் நடிக்க விருப்பம் அதிகமாக இருந்த விநாயகன் வாழ்க்கையை ஓட்டுவதற்காக பயர் டான்ஸ் என்னும் நடனமாடி பிழைப்பை ஒட்டி வந்தார். மிக ஆபத்தான முறையில் நெருப்பை வைத்து ஆடும் நடனம் தான் இவருக்கு சோறு போட்டது.

சினிமாவில் ஆரம்பத்தில் கூட்டத்தில் கோவிந்தா போட்டு நடித்தாலும் இவர் திறமையை வெளிக் கொண்டு வந்தவர் நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். இவர் விநாயகன்தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துவார் என்று நிறைய படங்களில் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.

Also Read: காலில் விழுந்ததை தவறாக சித்தரித்தாலும் வசூலில் வெளுத்து வாங்கும் ஜெயிலர்.. தனிக்காட்டு ராஜாவாக ஜெயித்த ரஜினி

2016ம் ஆண்டு துல்கர் சல்மான், சாய் பல்லவி நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த  ‘கலி’ திரைப்படத்தில் விநாயகன் தன்னை நிரூபித்து காட்டியுள்ளார். இந்தப் படத்தில் விநாயகன் நடிப்பதற்கு முக்கிய காரணம் துல்கர் சல்மான் தான் அவர் தனிப்பட்ட முறையில் சிபாரிசு செய்ததால் தான் இந்த பட வாய்ப்பு விநாயகனுக்கு கிடைத்தது.

அந்த படம் மூலம் தான் இவரை எல்லோரும் சினிமாவில் அடையாளம் கண்டுள்ளனர்.இப்போது ஜெயிலர் படத்தில் வர்மன் கேரக்டரின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற விநாயகன், இனி அடுத்தடுத்த படங்களில் பின்னிப் பெடல் எடுக்கப் போகிறார்.

Also Read: ஒரே நடிகருக்கு மகள், மனைவி, தங்கையாக நடித்த ஜெயிலரின் பொண்டாட்டி.. அடம்பிடித்து ரஜினியிடம் வாங்கிய வாய்ப்பு

Trending News