Jailer Movie Victory: தன்னுடைய 72 வயதிலும் ஹீரோவாக ஜொலித்துக் கொண்டு வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. அந்த வகையில் நெல்சன் இயக்கத்தில் கூட்டணி வைத்து ஜெயிலர் படத்தை நடித்து முடித்து வெற்றியை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 10ம் தேதி உலகம் முழுவதும் ஜெயிலர் படம் கிட்டத்தட்ட 900 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி திருவிழா மாதிரி கொண்டாடி வந்தார்கள்.
மேலும் இப்படம் மல்டி ஸ்டார் படமாக மற்ற மொழி பிரபலங்களையும் நடிக்க வைத்து வெற்றியைப் பார்த்து இருக்கிறது. அதனால் தான் என்னமோ வசூலை வாரி குவித்து அள்ளிக்கொண்டிருக்கிறது. அதனால் சன் பிக்சருக்கு இந்த படத்தின் மூலம் கிடைத்த லாபத்தை ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் போன்ற படக்குழுவில் உள்ள அனைவருக்கும் பரிசுகளை கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இப்படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 29 நாட்கள் ஆயிருக்கிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் 600 கோடிக்கும் மேல் லாபத்தை அடைந்திருக்கிறது. இப்படத்தின் வசூலை முறியடிக்கும் விதமாக மற்ற படங்கள் இருக்காது என்று ஆணித்தரமாக நிரூபித்துக் காட்டி இருக்கிறது என்றே சொல்லலாம்.
அந்த வகையில் இன்னொரு அதிசயமாக ஜெயிலர் படம் சாதனை படைத்திருக்கிறது. முக்கியமாக யாரும் கிட்ட நெருங்க முடியாத அளவிற்கு முதல் முறையாக தமிழ் சினிமாவில் பெருமை சேர்க்கும் படியாக இருக்கிறது. அதாவது இப்படத்திற்கு 100 கோடி பங்கு லாபமாக கிடைத்திருக்கிறது.
Also read: ஜெயிலர் வசூலை லியோவால் முறியடிக்க முடியாது.. மீசையை எடுத்துறேன் என அக்ரிமெண்ட் போட்ட நடிகர்
அதாவது தமிழ்நாட்டில் மொத்தம் 195 கோடி வசூலித்ததாகவும், அதன் மூலம் படத்தின் ஷேர் 100 கோடி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இன்று 29 நாள் முடிவில் உலகம் முழுவதும் 610 கோடிக்கு மேல் வசூலை பார்த்து வருகிறது. இப்படம் உலக அளவில் அதிக வசூல் செய்த இரண்டாவது தமிழ் படமாக இருக்கிறது.
அந்த வகையில் இதுவரை பார்க்காத சாதனையை முத்துவேல் பாண்டியன் ஆக ரஜினி செய்து காட்டியிருக்கிறார். இதெல்லாம் ரஜினியின் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையான நடிப்பும் மற்றும் நெல்சனின் படைப்புகள் அனைத்திற்கும் சமர்ப்பணமாக அமைந்து வருகிறது.
Also read: ஜெயிலர் வர்மன் போல் மாறிய மம்மூட்டி.. கறை படிந்த பல், மிரட்டும் லுக்கில் வெளிவந்த பிரமயுகம் போஸ்டர்