Jailer: நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்திருக்கும் ஜெயிலர் படம் நேற்று அதிரி புதிரியாக வெளியானது. பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் இப்படம் தற்போது உலகம் எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே சமயம் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் கடும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
அந்த வகையில் நெல்சன் மண்ட மேல இருக்குற கொண்டையை மறந்தது போன்ற ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார். அதாவது சூப்பர் ஸ்டாருக்கு குழந்தையிலிருந்து வயதானவர்கள் வரை அனைவரும் ரசிகர்களாக இருக்கின்றனர். அதிலும் சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா குழந்தை கூட சொல்லும் என்ற பாட்டே இருக்கிறது.
Also read: சூப்பர் ஸ்டார் பெயரை காப்பாற்றிய 7 இயக்குனர்கள்.. இக்கட்டான சூழ்நிலையில் கைகொடுத்த நெல்சன்
அந்த அளவுக்கு ரஜினிக்கு குட்டி ஃபேன்ஸ் நிறைய பேர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அதிருப்தி அடையும் படியாக தான் ஜெயிலர் இப்போது இருக்கிறது. ஏனென்றால் படத்தின் இரண்டாம் பாதியில் அளவுக்கு அதிகமான வன்முறைகள் காட்டப்பட்டிருக்கிறது.
அங்கங்கு ரத்தம் தெறிக்கும் காட்சிகளும் புல்லட் சத்தம், தலையை வெட்டுவது, காதை அறுப்பது என ரத்த சகதியாக தான் படம் இருக்கிறது. இது நிச்சயம் குழந்தைகள் பார்க்க தகுந்தது கிடையாது. அந்த வகையில் நெல்சன் இந்த ஒரு இடத்தில் கோட்டை விட்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
Also read: சூப்பர் ஸ்டார், நெல்சன் காம்போ வெற்றி பெற்றதா.? முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்
மேலும் இந்த வன்முறைகளை கொஞ்சம் குறைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற கருத்து தான் இப்போது எழுந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் படத்தில் ரசிகர்களின் ஆதரவை பெற்ற பல பிரபலங்கள் இருக்கின்றனர். அவர்களை கூட நெல்சன் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்.
சூப்பர் ஸ்டாரை திருப்தி படுத்த வேண்டும் என்ற நினைப்பிலும், ரசிகர்களை கொண்டாடச் செய்ய வேண்டும் என்ற ஆசையிலுமே அவர் இது போன்ற விஷயங்களை கவனிக்க தவறி இருக்கிறார். இந்த விஷயங்கள் படத்திற்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும் தலைவரின் அலப்பறை ரசிக்கும் படியாக தான் இருக்கிறது. அந்த வகையில் ஜெயிலரை தலைவருக்காகவே ஒரு முறை பார்க்கலாம்.
Also read: ஜெயிலரில் கதையோடு ஒட்டாத 5 கதாபாத்திரங்கள்.. மில்க் பியூட்டியை வேஸ்ட் பீஸ் ஆக்கிட்டியே நெல்சா