ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ரிலீஸ்-க்கு முன்பே வசூல் வேட்டையில் சொல்லி அடிக்கும் ஜெயிலர்.. வாய் கிழிய பேசினவங்களுக்கு விழும் அடி

Actor Rajini In Jailer: பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்கள் என்றால் அதை கொண்டாடுவதற்கு ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருப்பார்கள். அதிலும் ரஜினி படங்கள் என்றால் இன்னும் ஒரு படி மேலே தான் இருப்பார்கள். அந்த வகையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து முடித்துள்ள ஜெயிலர் படத்தை கொண்டாடுவதற்கு ஆரவாரமாக எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

இன்னும் மூன்று தினங்களில் திரையரங்குகளில்  வர இருக்கிறது. அதனால் இப்படத்தை தியேட்டரில் கண்டு களிப்பதற்கு அட்வான்ஸ் புக்கிங் தொடங்கிவிட்டது. இப்படத்தை தமிழ்நாடு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் கொண்டாடுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.

Also read: ரஜினியவே வந்து பாருன்னு மிரட்டும் விநாயகன்.. மொக்க, லொடுக்கு என கலக்கிய 5 படங்கள்

அந்த வகையில் ஜெயிலர் படத்தை முதல் நாளிலேயே பார்ப்பதற்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இப்படம் இந்தியா முழுவதும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படுவதால் இதனுடைய டிக்கெட் வசூல் பெரிய அளவில் லாபத்தை பார்த்து வருகிறது.

மற்ற நடிகர்களை விட எப்பொழுதுமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் என்றால் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் அதிக மவுஸ் உண்டு. இதனைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் டிக்கெட் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

Also read: ஓ சொல்றியா மாமாவுக்கு ஒரு காவாலய்யா! ரஜினியை பின்னுக்கு தள்ளிய தமன்னா, ப்ளூ சட்டையின் சேட்டை

மேலும் இப்பொழுது வரை தமிழ்நாட்டில் மட்டும் 13 கோடிகள் வரை விற்பனை ஆயிருக்கிறது. அதனைத் தொடர்ந்து இன்னும் ரிலீஸ் ஆவதற்கு மூன்று நாட்கள் இருப்பதால் அதற்குள் 25 கோடிகள் தொட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இல்லாத அதிக லாபத்தை ஜெயிலர் படம் பார்க்கப் போகிறது.

இதனால் ஜெயிலர் படத்தின் வசூல் மொத்தத்தையும் பட்டைய கிளப்பிக் கொண்டு வருகிறது. இதுவரை ரஜினியை பற்றி தாறுமாறாக விமர்சனங்களை கொடுத்து வாய்கிழிய பேசிட்டு வந்த அனைவருக்கும் இதனுடைய வெற்றி மற்றும் லாபம், அவர்களுக்கு பெரிய அடியாக இருக்கப் போகிறது.

Also read: வாயில் விஷத்தோடு வடிவுக்கரசி நடித்த 5 படங்கள்.. தேள் போல் சிவாஜியையும், ரஜினியையும் கொட்டிய வேதவள்ளி

Trending News