Jailer Collection Report: கடந்த 10-ம் தேதி மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஜெயிலர் முதல் நாளிலேயே வரலாறு காணாத வரவேற்பை பெற்றது. இந்த முறை மிஸ் ஆகக்கூடாது என்ற வெறியில் களமிறங்கிய நெல்சன் சூப்பர் ஸ்டாரை வைத்து சரியான சம்பவத்தை நடத்திவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த அளவுக்கு முத்துவேல் பாண்டியனின் அலப்பறை ரணகளமாக இருப்பதாக ரசிகர்கள் புகழாரம் சூடி வருகின்றனர். படம் பற்றி சில நெகட்டிவ் கருத்துக்கள் வெளிவந்தாலும் அதையெல்லாம் ஓவர் டேக் செய்திருக்கிறது சூப்பர் ஸ்டாரின் இந்த ஜெயிலர்.
Also read: ரஜினிக்காக ஓடிவந்த சிவராஜ்குமார், மோகன்லால்.. ஜஸ்ட் மிஸ் ஆன பாலய்யா
மேலும் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் போன்ற நடிகர்களின் என்ட்ரியும் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. அதனாலயே இப்படம் வெளியாகி இரண்டு நாட்களிலேயே தரமான வசூலை வேட்டையாடி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
அந்த வகையில் முதல் நாளிலேயே ஜெயிலர் 95 கோடி வரை வசூலித்திருந்தது. அதைத்தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று 56 கோடி வரை வசூல் லாபம் பார்த்திருந்தது. ஆக மொத்தம் இந்த இரு நாட்களிலேயே இப்படம் 150 கோடிகளை தட்டி தூக்கி இருக்கிறது.
Also read: சூப்பர் ஸ்டார், நெல்சன் காம்போ வெற்றி பெற்றதா.? முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்
இப்படி திரும்பும் பக்கமெல்லாம் ஜெயிலருக்கு நல்ல வரவேற்பை ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர். அதில் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டு ரசிகர்களும் தலைவரை கொண்டாடி வருவது தான் ஆச்சரியம். அந்த வரிசையில் மூன்றாவது நாளான இன்றும் ஜெயிலர் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அதிலும் பல ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லையே என்ற குறையும் இருக்கிறது. இப்படி நல்ல வரவேற்பை பெற்று வரும் ஜெயிலர் மூன்றாவது நாளான இன்று 200 கோடியை தாண்டி விடும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் நெல்சன், சூப்பர் ஸ்டாரின் மாஸ் காம்போ தரமான சம்பவத்தை நிகழ்த்தி நெகட்டிவ் விமர்சனங்களுக்கான பதிலை கொடுத்திருக்கின்றனர்.
Also read: சூப்பர் ஸ்டார் பெயரை காப்பாற்றிய 7 இயக்குனர்கள்.. இக்கட்டான சூழ்நிலையில் கைகொடுத்த நெல்சன்