ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

குழந்தை முகத்தை வைத்து ஜெய்சங்கர் மிரட்டிய 5 படங்கள்.. நிஜத்தில் சொக்கத்தங்கமாய் வாழ்ந்த ஜேம்ஸ் பாண்ட்

1960ஆம் ஆண்டு காலகட்டத்திலிருந்து 90 ஆம் ஆண்டு கால கட்டம் வரை தனது நடிப்பின் மூலமாக ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் தான் ஜெய்சங்கர். ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோவாக நடிக்க வந்த ஜெய்சங்கர் வில்லனாக நடிக்க ஆரம்பித்த போது பலரும் இவரை ஊக்கப்படுத்தவில்லை. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத நடிகர் ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட நடிகர்களோடு இணைந்து வில்லாதி வில்லனாக நடித்து கலக்கி இருப்பார். அப்படி அவர் வில்லனாக நடித்த 5 சூப்பர்ஹிட் படங்களை தற்போது பார்க்கலாம்.

முரட்டு காளை : 1980 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரதி அக்னிஹோத்ரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான முரட்டுக்காளை திரைப்படத்தை இயக்குனர் முத்துராமன் இயக்கியிருப்பார். சுந்தர வேலு என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெய்சங்கர் அத்திரைப்படத்தில் ரஜினிகாந்தின் காளையா கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போலவே முரட்டுத் தனமாகவே நடித்திருப்பார். இத்திரைப்படம் ரஜினியின் கேரியரில் எவ்வளவு முக்கியமோ, அதேபோல ஜெய்சங்கரின் கேரியரில் முக்கியமானதாக அமைந்தது.

Also Read : ஜெய்சங்கர் போலவே எந்த சர்ச்சையிலும் சிக்காமல் ஒரே ஹீரோ.. மக்களை கவர்ந்த நாயகன்!

நீங்கள் கேட்டவை: இயக்குனர் தியாகராஜன் , அர்ச்சனா, சில்க் ஸ்மிதா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படத்தை இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கியிருந்தார். இளையராஜாவின் இசையில் வெளியான இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டான நிலையில், ஜெய்சங்கரின் முத்துலிங்கம் கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது.

படிக்காதவன்: நடிகர் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், அம்பிகா உள்ளிட்டோரின் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட்டான இத்திரைப்படத்தை இயக்குனர் ராஜசேகர் இயக்கியிருந்தார். 250 நாட்களையும் கடந்து திரையரங்கில் ஓடிய இத்திரைப்படத்தில் பல வில்லன்கள் நடித்திருப்பர். அதில் முக்கியமானவர் தான் சக்கரவர்த்தியாக நடித்த ஜெய்சங்கரின் வில்லத்தனம். படிக்காதவன் திரைப்படம் ஜெய்சங்கரின் வில்லனிசத்திற்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

Also Read : ஜெயலலிதாவுடன் நெருக்கம் காட்டிய ஜெய்சங்கர்.. கோபத்தில் துப்பாக்கியுடன் சென்ற காதலர்

அபூர்வ சகோதரர்கள்: கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த இத்திரைப்படத்தை இயக்குனர் சங்கீதம் சீனிவாசன் இயக்கியிருப்பார். தனது தந்தையின் மரணத்திற்கு காரணமான வில்லன்களை, அப்பு காதாபாத்திரத்தில் நடித்த கமலஹாசன் அனைவரையும் பழி வாங்கி கொல்வார். அதில் சத்யமூர்த்தி என்ற முக்கிய வில்லனாக ஜெய்ஷங்கர் நடித்திருப்பார். இக்கதாபாத்திரம் துப்பாக்கியால் பின்பக்கம் தானாகவே சுட்டு இறந்துவிடும் காட்சி தமிழ் சினிமாவில் புதிதாக அமைந்தது.

காதல் பரிசு : கமல்ஹாசன், அம்பிகா ராதா உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படத்தை இயக்குனர் ஜெகநாதன் இயக்கியிருப்பார். கைலாஷ் என்ற முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெய்ஷ்ங்கரின் நடிப்பு பெருமளவு பேசப்பட்டது.இளையராஜாவின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ஹிட்டானது.

Also Read : ஒரே நாளில் 3 மற்றும் ஒரே நேரத்தில் 34 படங்களின் ஷூட்டிங்.. எம்ஜிஆர் செல்லப்பிள்ளையின் சாதனை

Trending News