Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கமல், சூர்யாவை நசுக்கியது போல விஜய்யை நசுக்கும் திட்டம் பலிக்குமா.? ஜனநாயகனுக்கு காத்திருக்கும் நெருக்கடி

கமல், சூர்யாவை நசுக்கியது போல விஜய்யை நசுக்கும் திட்டம் பலிக்குமா.? ஜனநாயகனுக்கு காத்திருக்கும் நெருக்கடி

சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் மூலம் பல குழந்தைகள் மறுவாழ்வு பெற்று சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நிற்கின்றனர். ஆனாலும் இது போன்ற மாற்றத்தை நோக்கி செல்லும் சூர்யாவிற்கு படம் ரிலீஸ் ஆனால் கடும் நெருக்கடி தரப்படுகிறது. ஏற்கனவே ஜோதிகா பேசிய […]

சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் மூலம் பல குழந்தைகள் மறுவாழ்வு பெற்று சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நிற்கின்றனர். ஆனாலும் இது போன்ற மாற்றத்தை நோக்கி செல்லும் சூர்யாவிற்கு படம் ரிலீஸ் ஆனால் கடும் நெருக்கடி தரப்படுகிறது.

ஏற்கனவே ஜோதிகா பேசிய பேச்சு, ஜெய் பீம் படத்தில் கேலண்டர் பிரச்சனை, மும்பையில் போய் பாலிவுட் படத்திற்கு முன்னுரிமை கொடுப்பது அதைத் தாண்டி இவர் செய்யும் நல்ல காரியங்கள் அனைத்துமே சேர்ந்து இவரை பிடிக்காதவர்கள் விமர்சனங்கள் மூலம் படங்களை ஓட விடாமல் செய்கின்றனர்.

அதே வலையில் சிக்கியவர் தான் ஆண்டவர், சினிமாவை தாண்டி அரசியலில் சாதிக்கலாம் என்று கட்சி ஆரம்பித்து அதனை சரியா செயல்படுத்த முடியாமல் தற்போது திமுகவில் அடைக்கலம் சென்று விட்டார். Thuglife விமர்சனங்கள் மூலமாகவே ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியாமல் தியேட்டரில் ஓட தடுமாறியது.

ஒரே வரி விமர்சனத்தால் மொத்த படத்தையும் சோலி முடித்து விட்டனர். இது அரசியல் கால் புணர்ச்சியாக பார்க்கப்படுகிறது, திமுக-வின் தோழமைக் கட்சியாக மாறியது கூட காரணமாக கூறப்படுகிறது.

தற்போது தவெக கட்சி தமிழ்நாட்டில் பெரும்பலம் வாய்ந்ததாக உருவெடுத்து வருகிறது. அதனை உடைப்பதற்காக பல சதிகள் போட்டு வருகின்றனர். அதில் முக்கியமான ஒன்றுதான் விஜய்-யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை ஓட விடாமல் தடுப்பது.

அதற்காக கமலஹாசன் பேசிய பேச்சை( தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் ) வைத்து ஜனநாயகன் படத்திற்கு தடை விதிப்போம் என்று பல அரசியல் கட்சிகள் அறிவித்து இருந்தன. இப்படி சூர்யா, கமலை நசுக்குவது போல விஜய்-யை நசுக்கி விடலாம் என்று நினைக்கின்றனர்.

ஆனால் அவருக்கு சினிமாவில் இருக்கும் மாஸ் வைத்து பார்க்கும் போது ஒன்னுமே பண்ணமுடியாது இது சாத்தியமே இல்லை என்கிறார் வலைப்பேச்சு அந்தணன். ஜனநாயகன் படத்தை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்துவிடலாம் என்று கனவு கூட கண்டு விடாதீர்கள் அது உங்களை திருப்பி அடிக்க போவது உறுதி.

கட்சியிலும், ஆட்சியிலும் பங்கு என்பது போன்ற நியாயமான ஒரு கூட்டணிக் கொள்கையை TVK வைத்துள்ளது. இதனால் BJP-அதிமுக கூட்டணியில் இணைவதற்கு பல முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம். எது எப்படியோ பல அரசியல் சம்பவங்களை செய்ய வரும் ஜனநாயகன் படம் உலகளவில் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகும் என்பதில் விஜய் தெளிவாக உள்ளாராம்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.