வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பச்சோந்தியாக மாறிய ஜனனியின் தங்கை.. நிஜமாகவே எதிர்நீச்சல் இயக்குனர் ஜெயிலுக்கு போய்விட்டார் போல!

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி அம்மா, நாச்சியப்பன் சொத்துக்காக தன்னுடன் 35 வருஷமாக வாழ்ந்த வாழ்க்கையை விட்டுவிட்டு போய்விட்டார் என்ற துக்கத்தில் இருந்தார். இந்த வேதனையை இன்னும் அதிகரிக்கும் வகையில் நாச்சியப்பன் கட்டின தாலியை கோயில்ல வைத்து கழட்டி கொடுக்குமாறு சதிகார கும்பல் முடிவெடுத்து விட்டார்கள்.

அதற்கு ஏற்ற மாதிரியும் ஜனனியின் அம்மா, புருஷனை என்கூட இல்ல அவர் கட்டின தாலி மட்டும் எனக்கு எதுக்கு என்று சொல்லி கோயிலில் கழட்டி கொடுக்க தயாராகி விட்டார். வந்ததும் அங்கே வழக்கம்போல் ஜனனி வீர வசனமாக வாயாலேயே வடை சுட ஆரம்பித்து விட்டார். ஏற்கனவே நிறைய பேரிடம் ஏகப்பட்ட சபதத்தை போட்டிருக்கிறார். அதில் ஒன்று கூட தற்போது வரை நிறைவேறுவதாக தெரியவில்லை.

இதில் வேற இன்னொரு சபதமாக மெய்யப்பன் குடும்பத்தினிடம் நீங்கள் எங்களை தேடி வருவீர்கள். ஜனனி என்னுடைய பேத்தி என்று சொந்தம் கொண்டாடுவீர்கள். அதை உங்கள் வாயாலே சொல்ல வைப்பேன் என்று வழக்கம்போல் ஒரு சபதத்தை போட்டு விட்டார். ஜனனிக்கு இந்த வாய் மட்டும் இல்லனா நாய் கூட மதிக்காதே என்பது சரியாகத்தான் இருக்கிறது.

Also read: குணசேகரனை ஓரங்கட்ட போகும் எதிர்நீச்சல் டீம்.. மொத்த டிஆர்பியும் சொதப்பிய கொம்பேறி மூக்கன்

பிறகு மெய்யப்பன் குடும்பத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்தபடி ஜனனி அம்மா தாலியை கழட்டி நாச்சியப்பன் மூஞ்சியில் எரிந்து விடுகிறார். அதன் பின் தான் ஒரு எதிர்பாராத திருப்பமே இருக்கிறது. அதாவது ஜனனியின் தங்கை அஞ்சனாவை வாசு இந்த இடத்திற்கு கூட்டிட்டு வருகிறார். ஆனால் வந்த அஞ்சனா அம்மாவின் பக்கம் போகாமல் அவரும் சொத்துக்காக நாச்சியப்பன் கூட சேரும்படி பச்சோந்தியாக மாறப் போகிறார்.

இதனைத் தொடர்ந்து அஞ்சனா நாச்சியப்பன் கூட அந்த குடும்பத்தில் தான் இருக்கப் போகிறார்கள். ஒருவேளை அஞ்சனா கல்லூரியில் படிக்கும் ஒருவரை காதலிப்பதாக ஏற்கனவே வந்த நிலையில் அந்த காதலன் உமையாள் மகன் சித்தார்த்தா கூட இருக்கலாம். ஏதோ ஒரு விதத்தில் இவர்களுக்கு முடிச்சு போட போகிறார்கள்.

ஆனால் ஏற்கனவே குணசேகரன் வீட்டில் உள்ள பெண்கள் என்ன செய்வதென்று தெரியாமல் வழக்கம்போல் புலம்பிக் கொண்டு அடுப்பங்கரையிலேயே இருந்து வருகிறார்கள். போதாக்குறைக்கு இன்னொரு ஆணாதிக்க குடும்பத்தையும் புதுசாக காட்டி நாடகத்தை மொத்தத்தையும் சொதப்பிக்கொண்டு வருகிறார். இதையெல்லாம் பார்க்கும் பொழுது இந்த நாடகத்தின் இயக்குனர் திருச்செல்வம்  உண்மையிலேயே ஜெயிலுக்குப் போய்விட்டாரோ என்ற சந்தேகம் எழும்புகிறது.

Also read: சைடு கேப்பில் மகனுக்கு தோள் கொடுக்கும் பூமர் அங்கிள்.. பாக்யாவை ஓவர் டேக் செய்யும் கோபி

Trending News