வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

குணசேகரன் விரித்த வலையில் சிக்கிய ஜீவானந்தம்.. ஒரு வழியா தர்ஷினி கடத்தலுக்கு முடிவு கட்டிய எதிர்நீச்சல்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், கடந்த பல நாட்களாக தர்ஷினி கடத்தி வைத்து துன்புறுத்தி வருவதை மட்டுமே கதையாக நகர்த்தி வந்தார்கள். அந்த வகையில் தற்போது தர்ஷினி அங்கிருந்து தப்பித்து வந்த நிலையில் மறுபடியும் அடியாட்களிடம் மாட்டிக் கொண்டார். ஆனால் இந்த முறை ஜீவானந்தம், தர்ஷனியை பாதுகாப்பாக காப்பாற்றி விட்டார்.

ஆனால் இதற்கு இடையில் ஐபிஎஸ் குற்றவை, தர்ஷினியை தேடி வந்த நிலையில் அவர் காணும் என்றதும் அடியாட்கள் கும்பலை பிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விசாரிக்கிறார்கள். ஆனால் அங்கு தான் குணசேகரன் ஒரு சூசமத்தை பண்ணி இருக்கிறார். அதாவது இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வரும் என்றுதான் அவர் பெயர் வெளியே வந்து விடக்கூடாது என்பதற்காக ஜீவானந்தத்தை சிக்க வைக்க பிளான் பண்ணினார்.

அதற்கு ஏற்ற மாதிரி தர்ஷினி கைப்பட ஒரு லெட்டர் எழுதின மாதிரி அனைத்து விஷயங்களையும் எழுதி அதற்கு காரணம் ஜீவானந்தம் தான் என்கிற மாதிரி உருவாக்கிட்டார். அந்த லெட்டர் தற்போது ஐபிஎஸ் அதிகாரி குற்றவை-யிடம் கிடைத்ததால் இதற்கு முழுக்க காரணம் ஜீவானந்தம் தான் என்கிற மாதிரி ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள்.

Also read: முத்து மூலம் மீனாவுக்கு அடித்த ஜாக்பாட்.. மனோஜ்க்கு தெரிய வந்த ரோகினியின் லீலைகள், இதுக்கே இப்படியா!

இதற்கெல்லாம் ஒரே தீர்வு ஜீவானந்தம் தர்ஷினியை கூட்டிட்டு வந்து கோர்ட்டில் ஆஜர் படுத்திவிட்டால் எல்லா பிரச்சினையும் சரியாகிவிடும். ஆனால் ஜீவானந்தம் யார் கடத்தினார் என்கிற உண்மையை மட்டும் தர்ஷினியே சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். அதனால் தர்ஷனியும் ஜீவானந்தம் பேச்சை கேட்டு என்னை குணசேகரன் தான் கடத்தினார் என்கிற உண்மையை மறைத்து விடுகிறார்.

ஆக மொத்தத்தில் பல மாதங்களுக்குப் பிறகு தர்ஷினி கடத்தலுக்கு ஒரு முடிவு வந்து விட்டது. இதை வருகிற ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேர ஸ்பெஷல் எபிசோடு நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதனை தொடர்ந்து கரிகாலன் மற்றும் ஜான்சி ராணி, குணசேகரன் வீட்டிற்குள் வந்து மறுபடியும் அராஜகம் பண்ண ஆரம்பித்து விடுகிறார்கள்.

போதாதுக்கு தற்போது கதிர் மற்றும் ஞானத்திற்குள் சண்டை வந்து ரேணுகா நந்தினிக்கும் ஒற்றுமை இல்லாமல் போய்விடுகிறது. அதிலும் இந்த ஞானம் மற்றும் ரேணுகா ரொம்பவே ஓவராக அழிச்சாட்டியம் பண்ணுவது பார்க்கவே எரிச்சலை உண்டாக்குகிறது. ஆக மொத்தத்தில் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்பதற்கு ஏற்ப தற்போது கதை தடுமாறி போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

Also read: ரோகினிக்கு மாமியாரும் கணவரும் சேர்ந்து கொடுக்கும் டார்ச்சர்.. முத்துவையும் மீனாவையும் பிரிக்க பிளான் பண்ணிய மச்சான்

Trending News