திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

களவாணித்தனமாக சொத்தை ஆட்டையை போட்ட ஜீவானந்தம்.. குணசேகரனின் குறுக்கு புத்தியில் சேர்த்த சொத்தா.?

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே கதி கலங்கி நிற்கிறார் குணசேகரன். அதாவது தன்னுடைய ஆபீஸில் எல்லா சொத்துக்கும் யாரோ ஒருவர் உரிமை கொண்டாடி வந்து நிற்கிறார் என்று எதுவுமே புரியாமல் ஆட்டம் கழண்டு போயிருக்கிறார்.

அத்துடன் தன்னை பற்றியும் தன் வீட்டின் நிலைமையும் புட்டு புட்டு வைக்கும் இவர் யார் என்று தெரியாமல் இருந்த இவருக்கு, ஜீவானந்தம் கொடுத்த ஒரே பதிலடி நீ உழைச்சு சம்பாதித்த சொத்து கிடையாது. குறுக்குப் புத்தியில் மிரட்டி மற்றவரிடம் இருந்து அபகரித்து சேர்த்த சொத்து என்று அடிமட்டத்திலிருந்து விஷயத்தை ஆராய்ந்து சொல்லுகிறார்.

Also read: எமனுக்கே எமனாக வந்து நிற்கும் ஜீவானந்தம்.. பொட்டிபாம்பாக அடங்கும் ஜனனி குணசேகரன்

இதை கேட்டதும் குணசேகரனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே கண் கலங்கி நிற்கிறார். அத்துடன் ஜீவானந்தம், குணசேகரனுக்கு எதிராக பேசியபோது என்னடா நமக்கு வந்த சோதனையா இது என்று மொத்தமாக குடி மூழ்கி போனது போல் தவித்து வருகிறார்.

என்ன தான் குணசேகரன் இத்தனை நாளாக அடாவடித்தனமாக இருந்தாலும் தற்போது இவருடைய நிலைமையை பார்ப்பதற்கு பாவமாக தான் இருக்கிறது. அதிலும் மொத்த அழுகையும் அடக்கிக் கொண்டு கண் கலங்கி போய் நிற்கிறார். என்னதான் குணசேகரன் கெட்டவராக இருந்தாலும் அவரிடமிருந்து களவாணித்தனமாக தான் சொத்தையே ஆட்டைய போட்டிருக்கிறார் ஜீவானந்தம்.

Also read: லாஜிக்கே இல்லாமல் சொதப்பலாக போகும் எதிர்நீச்சல்.. நேருக்கு நேராக மோதும் ஜீவானந்தம் குணசேகரன்

ஆனால் இவர் பண்ணினது நியாயம் என்று பேசியபோது இவருடைய முகத்துக்கும் கேரக்டருக்கும் செட்டே ஆகாது போல் இருக்கிறது. அடுத்தபடியாக ஜனனி வழக்கம்போல் இதையும் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டு இருக்கிறார். தற்போது இவர் ஜீவானந்தம் பக்கம் நியாயம் என்று போகப் போகிறாரா. இல்லையென்றால் இது அப்பத்தாவின் சொத்து என்று உரிமைக்காக போராட போகிறாரா என்பது தெரியவில்லை.

ஆக மொத்தத்தில் குணசேகரனுக்கும், ஜனனிக்கும் சேர்த்தே சொத்து விஷயத்தில் மொத்தமாக நாமத்தை போட்டு விட்டார் ஜீவானந்தம். இவரும் ஒரு வழியில் அடியாட்களை வைத்து மிரட்டி சொத்தை பிடுங்கி தான் வருகிறார். இது இவருக்கு நியாயமாக தெரிகிறது என்றால், குணசேகரனுக்கு அவர் செய்தது நியாயமாக இருக்கிறது. முள்ளை முள்ளால தான் எடுக்க முடியும் என்று ஜீவானந்தம் நினைக்கிறார்.

Also read: குணசேகரனுக்கு சரியான ஆப்பை வைத்த ஜீவானந்தம்.. அம்மாடி ஜனனி இதுல நீ என்ன பண்ண போற?

Trending News