வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

குணசேகரனை காப்பாற்றிய ஜீவானந்தம்.. சொதப்பிய கௌதம், 40% சொத்து யாருக்கு தெரியுமா?

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆரம்பித்த 40% சொத்து விவகாரம் இப்பொழுது தான் முடிவுக்கு வந்திருக்கிறது. அப்பத்தா அந்த சொத்தை பெண்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக கிரீடம் என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். இதனை தலைமை பொறுப்பேற்க ஜீவானந்தத்தை நியாமத்திருக்கிறார்.

அத்துடன் இந்த 40% சொத்தை நிர்வாகம் பண்ணும் உரிமையை நான்கு மருமகளிடம் ஒப்படைத்திருக்கிறார். இதன் மூலம் அந்த வீட்டில் உள்ள பெண்கள் ஆசைப்பட்ட மாதிரி ஒவ்வொருவரும் சொந்த காலில் நின்னு போராடி ஜெயிக்கப் போகிறார்கள். இதற்கு அடிக்கல் நாட்டும் விழாவை அப்பத்தா தரமாக செய்திருக்கிறார்.

இதை அறிவித்த பிறகு குணசேகரன் மேடைக்கு வந்து ஜீவானந்தத்திற்கு இதை பரிசாக கொடுக்க வேண்டும் என்று அப்பத்தா கூறுகிறார். அந்த சமயம் குணசேகரன் எதுவும் சொல்ல முடியாததால் மேடைக்கு வந்து ஜீவானந்தத்திற்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கிறார். ஆனால் அப்பொழுது குணசேகரனை சுடுவதற்காக கௌதம் மறைமுகமாக குறி வைக்கிறார்.

Also read: குணசேகரன் ஆசைப்பட்ட 40% சொத்துக்கு முடிவு கட்டிய அப்பத்தா.. மொத்த பிளானையும் சொதப்பிய தோழர்

அதே மாதிரி குணசேகரன் ஏற்பாடு பண்ணின மர்ம நபரும் அப்பத்தா மற்றும் ஜீவானந்தத்தை குறி வைக்கிறார். ஆனால் இதில் கௌதம் குறி வைத்த துப்பாக்கியில் இருந்து மட்டுமே தோட்டா வெளியேறி சுடுகிற சத்தம் கேட்கிறது. அத்துடன் யாரோ ஒருவருக்கு ஆபத்து ஏற்பட்டதை பார்த்து மேடையில் இருப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சியாகிறார்கள்.

அந்த வகையில் குணசேகரனை கௌதம் குறி வைக்கிறார் என்பதை ஜீவானந்தம் பார்த்து அவரை காப்பாற்றி விடுகிறார் என்பது போல் தெரிகிறது. அத்துடன் ஜீவானந்தத்திற்கும் ஏதோ அடிப்பட்டது போல் இருக்கிறது. இதனால் குணசேகரன் ஏற்பாடு பண்ணின மர்ம நபர் எதுவும் செய்யாமல் போய்விடுகிறார். ஒருவேளை இந்த நாடகத்தில் இதன் பிறகாவது குணசேகரன் கொஞ்சம் திருந்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அத்துடன் குணசேகரன் வீட்டில் உள்ள பெண்கள் ஆசைப்பட்ட மாதிரி சொந்த காலில் நின்னு ஜெயிக்கப் போகிறார்கள். இப்படி தொடர்ந்து நல்ல விஷயங்களை கொண்டு வந்து கூடிய விரைவில் இந்த நாடகத்திற்கு எண்டு கார்டு போடப் போகிறார்கள். அதற்கு காரணம் பழைய குணசேகரன் இல்லாததால் டிஆர்பி ரேட்டிங் ரொம்பவே அடிபட்டுவிட்டது. அதனால் இப்படியே முடித்து விடலாம் என்று முடிவெடுத்து இருக்கலாம்.

Also read: வெறிகொண்ட பாம்பாக படை எடுத்து வரும் ஜீவானந்தம்.. தனக்குத்தானே சூனியம் வைத்த குணசேகரன்

Trending News