Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் திருவிழாவை முன்னிட்டு எதிர்பாராத பல சம்பவங்கள் நடக்கப் போகிறது. அந்த வகையில் ஒவ்வொருத்தரும் தயாராகி வருகிறார்கள். இதில் அந்த வீட்டில் உள்ள பெண்கள் வழக்கம் போல் நமக்கு ஏதாவது விடிவுகாலம் பிறக்காதா என்று அப்பத்தாவை நம்பி திருவிழாவிற்கு போகிறார்கள். கூடவே அந்த ஜான்சி ராணியும் அலப்பறை பண்ணிட்டு அவர்களுடன் சேர்ந்து போகிறார்.
இன்னொரு பக்கம் கிள்ளிவளவன், கதிர் மற்றும் கரிகாலன் ஏதோ சாதிக்கப் போகிறோம் என்ற நினைப்பில் ஜீவானந்தத்தை காலி பண்ண வேண்டும் என்று அதற்கான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு காரில் போகிறார்கள். ஆனால் போகும் போது இதுவரை மூஞ்சிய கடுகடுகுன்னு வச்சுட்டு இருந்த கதிர் இப்போதான் சிரிக்கவே தெரியுது போல. முகத்தில் அப்படி ஒரு புன்னகையுடன் கலகலப்பாக பேசிக் கொண்டு போகிறார்.
இத்தனை நாளா இதெல்லாம் எங்க மறைச்சி வச்சிக்கிட்டு இருந்த என்று கேட்பது போல் பார்க்கவே நன்றாக இருந்தது. ஆனால் கரிகாலன் தான் ஆரம்பத்தில் வெகுளித்தனமாக நடித்துவிட்டு தற்போது அனைவருடைய வெறுப்பையும் சம்பாதிக்கும் அளவிற்கு வன்மமாக பேச ஆரம்பித்து விட்டார். இதற்கிடையில் ஈஸ்வரி, ஜீவானந்தத்தை நினைத்துக் கொண்டு முகத்தில் எந்தவித ஒரு சிரிப்பும் இல்லாமல் கவலையுடன் போகிறார்.
ஏனென்றால் ஜீவானந்தம், ஈஸ்வரியின் சங்கார்த்தமே வேண்டாம் என்று அவரை வெறுக்கும் அளவிற்கு பேசிவிட்டார். அத்துடன் வெண்பாவையும் இனி நீங்க பார்க்கத் தேவையில்லை என்று தீர்மானமாக சொல்லிவிட்டார். இதனால் ஈஸ்வரி மனதளவில் ரொம்பவே உடைஞ்சி போய்விட்டார்.
அத்துடன் திருவிழாவில் ஜீவானந்தத்தின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் வந்து விடக்கூடாது என்ற பதட்டத்துடனும் இருக்கிறார். இன்னொரு பக்கம் குணசேகரன் கதாபாத்திரம் இனி வராது என்று எதிர்பார்த்த நிலையில் மறுபடியும் வேலராமமூர்த்தி கம்பேக் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் அவரும் திருவிழாவிற்கு போகப் போகிறார். அதே மாதிரி ஜீவானந்தமும் மொத்த கோபத்துடன் குணசேகரனை காலி பண்ண வேண்டும் என்று இருக்கிறார்.
மேலும் அப்பத்தாவும் அவருடைய 40% சொத்தை தாரவாத்து கொடுக்கப் போகிறார். இப்படி எல்லா விஷயமும் கைக்கூடி வரும் நேரத்தில் ஒருவர் உயிருக்கு ஆபத்து வருவது மட்டும் நிச்சயம். அதனால் குணசேகரன் கதாபாத்திரத்தை இதோடு முடித்துக் கொள்ளலாம் என்று முடிவு பண்ணிய எதிர்நீச்சல் டீம் குணசேகரனை பலிகாடாக ஆக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இப்படி பல ட்விஸ்ட்களை வைத்து திருவிழா நிகழ்ச்சி கலைகட்ட போகிறது.