Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தர்ஷினியை காப்பாற்ற களத்தில் இறங்கும் ஜீவானந்தம்.. முதல் அடி ராமசாமி, கிருஷ்ணசாமிக்கு தான்

தர்ஷினியை காப்பாற்ற களத்தில் இறங்கும் ஜீவானந்தம்.. முதல் அடி ராமசாமி, கிருஷ்ணசாமிக்கு தான்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், இத்தனை நாளாக முரடனாகவும், கொடூரமாகவும் அனைவரையும் சித்திரவதை செய்தவர் தான் கதிர். ஆனால் தற்போது இவருக்கு ஏற்பட்ட அடியும் உதையும் காரணமாக கையும் காலும் உடைந்து போய்விட்டது. […]

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், இத்தனை நாளாக முரடனாகவும், கொடூரமாகவும் அனைவரையும் சித்திரவதை செய்தவர் தான் கதிர். ஆனால் தற்போது இவருக்கு ஏற்பட்ட அடியும் உதையும் காரணமாக கையும் காலும் உடைந்து போய்விட்டது. இந்த சூழலில் இவரை பக்குவமாக பார்த்தது தாரா பாப்பாவும் நந்தினியும் தான்.

எப்பேர்ப்பட்ட கொம்பேறி மூக்கனாக இருந்தாலும் அன்பை காட்டினால் அடங்கி விடுவார்கள் என்பதற்கு உதாரணம் தான் தற்போது கதிர் முழுமையாக மாறிக் கொண்டு வருகிறார். கெட்டதிலும் ஒரு நல்ல விஷயம் என்பது போல் அடிபட்டதிலும் கதிர் திருந்தியது ஒரு நல்லதாக இருக்கிறது. ஆனாலும் இவரை அடித்தது யார் என்று தற்போது வரை மர்மமாகவே இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது தர்ஷினியை கடத்தியது யார் என்று தெரியாமல் புரியாத புதிதாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இதெல்லாம் கிருஷ்ணசாமி மற்றும் ராமசாமி உள்ளே நுழைந்ததற்கு அப்புறம் தான் ஒவ்வொரு விஷயமாக நடக்கிறது. ஜனனியை பழிவாங்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவருக்கும் டார்ச்சர் கொடுக்கிறார்.

அதே நேரத்தில் குணசேகரனிடம் நல்ல பெயரை வாங்கி குடும்பத்திற்குள் புகுந்து ஆட்டையை கலைக்க வேண்டும் என்பதற்காக ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி விரித்த வலை தான் இது. ஏனென்றால் குணசேகரனை கைக்குள் போட்டா தான் நினைத்த காரியத்தை சாதிக்க முடியும் என்பதினால். இதற்கிடையில் தர்ஷினி தேடிட்டு போன சக்தி, ஈஸ்வரி அனைவரும் ஜீவானந்தத்தை பார்ப்பதற்காக பர்கானாவை தேடி போனார்கள்.

ஆனால் ஜீவானந்தம் இல்லை என்று ஃபருக்கான சொன்ன பிறகு இங்கே நடந்த விஷயங்கள் அனைத்தும் ஜீவானந்தம் காதுக்கு போயிருக்கிறது. அதனால் தர்ஷணியை காப்பாற்றுவதற்காக கூடிய விரைவில் ஜீவானந்தம் களத்தில் இறங்கப் போகிறார். அந்த வகையில் ஜீவானந்தத்திற்கு முதலில் ஏற்படப்போகும் சந்தேகம் ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி மீதுதான். இவர்களை வைத்து தான் தர்ஷினியை காப்பாற்றப் போகிறார்.

அத்துடன் இந்த கதைகள் அனைத்தும் கொஞ்சம் வேகமாக நடந்தால் இன்னும் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். ஏனென்றால் இன்னும் மிச்சம் உள்ள கதைகள் ஏகப்பட்ட இடத்தில் ஆங்காங்கே குவிந்து கொண்டிருக்கிறது. அதனால் கூடிய விரைவில் தர்ஷனியை காப்பாற்றி இந்த கதையை முடித்துவிட்டு அடுத்து குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களை முன்னேறும் விதமாக காட்ட வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே சன் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் மறுபடியும் எதிர்நீச்சல் முதல் இடத்தை பிடிக்க முடியும்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.