வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தர்ஷினிக்காக களம் இறங்கிய ஜீவானந்தம்.. ஈஸ்வரிக்கு கிடைத்த உதவி, சூடு பிடிக்கும் எதிர்நீச்சல்

Ethirneechal: சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் பல வாரங்களாக தர்ஷினி காணாமல் போன கதை தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் அவர் கோர்ட்டில் கொடுத்த வீடியோ வாக்குமூலம் ஒட்டுமொத்த வழக்கையும் திசை திருப்பியது.

அதைத்தொடர்ந்து தற்போது கோர்ட்டில் ஈஸ்வரி தன் மகளை காப்பாற்ற கெஞ்சிய நிலையில் அவருக்கு காவல்துறையே உதவி செய்திருக்கிறது. அதற்கான ப்ரோமோ தான் தற்போது வெளிவந்துள்ளது. அதில் ஜீவானந்தத்தை போலீஸ் ஒருவர் தப்பிக்க வைக்க உதவி செய்கிறார்.

அதற்காக நடக்கும் பிளானில் ஜீவானந்தம் எஸ்கேப் ஆகிவிட ஈஸ்வரி அந்த போலீசுக்கு நன்றி சொல்கிறார். ஆனால் ஜீவானந்தம் தப்பித்ததை கண்டு அதிர்ச்சியாகும் மற்ற காவலர்கள் அவரை தேட முயற்சிக்கின்றனர். இப்படி சூடு பிடிக்கும் சீரியலில் தர்ஷினி விரைவில் காப்பாற்றப்படுவார் என்பது தெரிகிறது.

Also read: உண்மை சொல்லாமல் தியாகி மாறி சுற்றும் முத்து.. மருமகனை ரவுடி என மட்டம் தட்டி பேசிய மீனாவின் அம்மா

அதேபோல் குணசேகரன் வீட்டில் அழையா விருந்தாளி போல் வந்திருக்கும் ஜனனியின் அப்பத்தா இரண்டு நாள் தங்கப் போவதாக குண்டை போடுகிறார். ஏற்கனவே வீட்டில் ஒரு தாய்க்கிழவியின் அலப்பறை தாங்க முடியவில்லை. இதில் இந்த தாய் கிழவியும் சேர்ந்து கொண்டு என்னென்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை.

ஆனால் ஜான்சி ராணி இல்லாத குறையை போக்குவதற்காகவே இவர் வந்திருக்கிறார் என்று மட்டும் தெரிகிறது. இப்படி குணசேகரனுக்கு ஜால்ரா போட வந்திருக்கும் தாய்க்கிழவியால் அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்து வீடு ரெண்டாக போவது மட்டும் உறுதி.

Also read: அண்ணன்களால் துரத்தி அடிக்கப்படும் தம்பி.. வெறுப்பை விஷமாக கக்கும் கதிர்

Trending News