Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

மீண்டும் விஷாலுடன் கைகோர்க்கும் பி.எஸ்.மித்ரன்..ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகும் ‘இரும்புத்திரை 2’!

மீண்டும் விஷாலுடன் கைகோர்க்கும் பி.எஸ்.மித்ரன்..ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகும் ‘இரும்புத்திரை 2’!

தமிழ் சினிமாவில் டெக்னாலஜியை மையமாக வைத்து வித்தியாசமான கதைகளை கொடுப்பதில் இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு தனி இடம் உண்டு.அந்த வகையில்,விஷால் நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான‘இரும்புத்திரை’படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.சைபர் கிரைம்,ஆன்லைன் மோசடி,பர்சனல் இன்ஃபர்மேஷன்கள் திருடப்படுவது என அன்றைய காலகட்டத்திலேயே முக்கியமான பிரச்சினைகளை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.


இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார்.மேலும்,அர்ஜுன் வில்லனாக நடித்து தனது மிரட்டலான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். விஷால் மற்றும் அர்ஜுன் இடையிலான மோதலும் படத்திற்கு முக்கியமான பலமாக அமைந்தது.


இந்நிலையில்,‘இரும்புத்திரை 2’படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.இயக்குநர் பி.எஸ்.மித்ரன் மீண்டும் விஷாலுடன் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.மேலும்,படத்திற்கான ஸ்டோரி மற்றும் ஸ்கிரிப்ட்பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


முதல் பாகத்தில் சைபர் கிரைம் முக்கிய கதையாக இருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் ஏஐ டெக்னாலஜியை மையமாக வைத்து கதை உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஏஐ வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், அதன் மூலம் ஏற்படும் மோசடிகள்,போலியான வீடியோக்கள்,தகவல் திருட்டு போன்ற விஷயங்களைப் படத்தில் பேச வாய்ப்புள்ளது.


மேலும்,2027-ம் ஆண்டு படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.சமந்தா மற்றும் அர்ஜுன் மீண்டும் இந்தப் படத்தில் இணைவார்களா? என்பது இன்னும் உறுதியாகவில்லை.அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில்,‘இரும்புத்திரை 2’ குறித்த அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.