புதன்கிழமை, ஜனவரி 15, 2025

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா.? பிக்பாஸ் வீட்டையே அலறவிட்ட ஜோவிகா, வாயடைத்துப் போன விசித்ரா

Biggboss 7: இப்போது எங்கு திரும்பினாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றிய செய்திகள் தான் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதிலும் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவை பார்த்த பலரும் ஆஹா புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என ஆச்சரியம் விலகாத நிலையில் பேசி வருகின்றனர்.

அந்த வகையில் வத்திக்குச்சி வனிதாவின் மகள் ஜோவிகா இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது அம்மாவைப் போல் எதற்கெடுத்தாலும் சண்டை போடுவாரா அல்லது பக்குவமாக இந்த விளையாட்டை கையாள்வாரா என்பது போன்ற ஏகப்பட்ட கேள்விகள் இருந்தது.

Also read: பயங்கர டஃப் கொடுப்பார் என்று நினைத்தால் டம்மி பீசா இருக்காரு.. நடிகரை கலாய்த்து தள்ளும் ஹவுஸ் மேட்ஸ்

ஆனால் முதல் நாளிலேயே இவருடைய பேச்சும், நடவடிக்கையும் நன்மதிப்பை பெற தொடங்கியது. ஆனால் தற்போது அவர் கோபத்தோடு மரியாதை இல்லாமல் பேசி இருப்பதை பார்க்கும் போது இந்த வயசுல இவ்வளவு ஆகாது என்று தான் நினைக்க தோன்றுகிறது. அதாவது தனக்கு படிப்பு வரவில்லை என்ற விஷயத்தை அவர் ஏற்கனவே வெளிப்படையாக கூறியிருந்தார்.

அதைப்பற்றி இப்போது விசித்ரா பேசும் போது கடுப்பான ஜோவிகா தன் பக்க நியாயத்தை பேசுகிறார். ஆனால் அடுத்தடுத்த வாக்குவாதங்களால் இந்த பிரச்சனை இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது. நான்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். என் தாத்தாவோ, அம்மாவோ, அப்பாவோ வரவில்லை.

Also read: அடிச்சு வாய ஒடச்சிடுவேன், போடா லூசு.. 5வது நாளே கலவர பூமியாக மாறிய பிக் பாஸ் வீடு

அதனால் என்னை பத்தி மட்டும் பேசு, என் பேமிலி பத்தி பேசாத என விசித்ராவை வயதிற்கு கூட மரியாதை இல்லாமல் ஜோவிகா பேசியது எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் இவருடைய தைரியமான பேச்சு ஆதரவை பெற்றாலும் இப்பொழுதுதான் ஒவ்வொருவரின் முகத்திரையும் கிழிய ஆரம்பித்து இருக்கிறது என்பதுதான் உண்மை.

அந்த வகையில் இந்த சீசன் முதல் வாரத்திலேயே இவ்வளவு ரகளையாக இருக்கிறது என்றால் அடுத்தடுத்த வாரங்களை சொல்லவா வேண்டும். ஆக மொத்தம் இந்த வாரம் ஆண்டவருக்கு சரியான ஒரு டாப்பிக் கிடைத்திருக்கிறது. இவ்வாறாக பிக்பாஸ் வீட்டையே அலறவிட்டு விசித்ராவை வாயடைக்க செய்துள்ளார் ஜோவிகா.

Also read: வனிதாவை விட ஸ்மார்ட் ஆக பிளே பண்ணும் ஜோவிகா.. எல்லாரையும் சிக்கவச்சிட்டு எஸ்கேப் ஆன தந்திரம்

Trending News