வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஜூன் 14-ல் OTT-யில் வெளிவரும் தரமான 14 படங்கள்.. குரங்கு சேட்டை செய்யும் சிவகார்த்திகேயன்

June 14 OTT Release: இந்த வாரம் OTT ரிலீசில் தரமான படங்கள் சம்பவம் செய்ய காத்திருக்கிறது. தியேட்டருக்கு போய் படம் பார்ப்பது ஒரு அனுபவம் என்றால், வீட்டிற்குள் அமைதியாக உட்கார்ந்து குடும்பத்தோடு ஒரு நல்ல படத்தை பார்ப்பது என்பது மேலும் சிறந்த நல்ல அனுபவம். அப்படி OTT தளங்களில் படம் பார்க்க விரும்புபவர்கள் இந்த படத்தை எல்லாம் நோட் பண்ணி வச்சுக்கோங்க.

நெட்ப்ளிக்ஸ்: இந்த வாரம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில், தெலுங்கு படமான கிங்ஸ் ஆப் கோதாவரி, இந்தியில் மகாராஜ், அபாங் ஆதிக், ஏஜென்ஸ் ஆப் மிஸ்டரி, டெல் திம் யூ லவ் மீ (Documentary), நைட் மேர்ஸ் அண்ட் டே ட்ரீம்ஸ் (சீரிஸ்) போன்ற படங்கள் ரிலீஸ் செய்யப்படுகின்றன.

அமேசான் ப்ரைம்: அமேசான் ப்ரைம் தளத்தில் இந்த வாரம் தி பாய்ஸ் என்னும் வெப் சீரிஸின் நான்காவது எபிசோட், சோலிவுட் என்னும் மராத்தி படம், கிரீன் பார்டர் ஆகியவை ரிலீஸ் ஆகின்றன.

Zee 5: ஜீ 5 தளத்தில் பருவு என்னும் தெலுங்கு ஆக்சன் திரில்லர் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இதில் நிவேதா பெத்துராஜ் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் லவ் கி அரேஞ்ச் மேரேஜ் என்னும் ஹிந்தி படமும் ரிலீஸ் செய்யப்படுகிறது.

குரங்கு சேட்டை செய்யும் சிவகார்த்திகேயன்

ஆஹா தமிழ்: ஆஹா தமிழ் OTT தளத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்ற குரங்கு பெடல் படம் நாளை ரிலீஸ் ஆகிறது. அது மட்டுமல்லாமல் டியர் நானா, பாரிஜாத பருவம் என்னும் தெலுங்கு படங்களும் ரிலீஸ் செய்யப்படுகிறது.

சமீபத்திய OTT செய்திகள்

Trending News