திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்யின் காலை வாரிவிட்ட ஜோதிகா.. 3 ஹீரோக்களுக்கு மட்டும் கொடுத்த கௌரவம்

Actress Jyothika : ஜோதிகா இப்போது சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள நிலையில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த சூழலில் மலையாள நடிகர் மம்முட்டி உடன் இணைந்து காதல் தி கோர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் ஜோதிகா கலந்து கொண்டார்.

அப்போது சில நடிகர்களுடன் நடிக்கும் போது தான் எதார்த்தமாக இருக்கும். நடிகைகளின் நிலைமையை புரிந்து கொண்டு எதுவாக நடந்து கொள்வார்கள். அதுவும் குறிப்பிட்ட சில நடிகர்கள் மட்டும்தான் அவ்வாறு இருக்கிறார்கள் என்று ஜோதிகா கூறியிருக்கிறார்.

அதாவது ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என டாப் நடிகர்கள் அனைவருடனுமே ஜோதிகா இணைந்து நடித்திருக்கிறார். நடிப்பு அரக்கி என்ற பெயர் வாங்கி உள்ள இவர் பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார். இந்த சூழலில் சூர்யா, அஜித் மற்றும் மாதவன் ஆகியோருடன் நடிக்கும் போது ஏதுவாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

Also Read : ஜோதிகாவின் ரீ என்ட்ரியில் விழுந்த கரும்புள்ளி.. விவகாரமான கதையால் அப்செட் ஆன சூர்யா

அதாவது ஜோதிகா விஜய்யுடன் நிறைய படங்கள் நடித்து இருக்கிறார். அதுவும் தற்போது வரை குஷி படம் விஜய் ரசிகர்களின் ஃபேவரைட் படமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஒரு பொது மேடையில் விஜய்யை காலை வாரி விடும் படி ஜோதிகா அவர் பெயரை மட்டும் சொல்லவில்லை.

வேண்டுமென்றே ஜோதிகா இப்போது உச்ச நடிகராக இருக்கும் விஜய்யின் பெயரை சொல்லாமல் தவிர்த்து உள்ளார் என்று விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ஏற்கனவே ஜோதிகா பல விஷயங்களைப் பேசி சர்ச்சையை சந்தித்த நிலையில் இப்போது விஜய் ரசிகர்களின் எதிர்வளையை சந்திக்க உள்ளார்.

Also Read : 5 படங்களில் மட்டும் நடித்துவிட்டு முழுக்கு போட்ட நடிகை.. ஜோதிகாவை ஓட ஓடவிட்ட சினேகிதி

Trending News