படத்தில் தான் மார்க்கெட் இல்லை, நாங்க அதுல சம்பாதிப்போம்.. கோடி கோடியாய் சம்பாதிக்கும் காஜல், த்ரிஷா

திரை உலகில் முன்னணி நடிகையாக, ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த பல நடிகைகளுக்கு தற்போது மார்க்கெட் குறைந்து போயிருக்கிறது. புது புது நடிகைகளின் வரவால் அவர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அப்படியே ஒன்று, இரண்டு திரைப்படங்களில் நடித்தாலும் அந்த படங்களும் வரவேற்பு பெறுவது இல்லை.

அந்த வகையில் திரிஷா, காஜல் அகர்வால், ஹன்சிகா போன்ற நடிகைகளுக்கு தற்போது மார்க்கெட் சுத்தமாக குறைந்து போயிருக்கிறது. இதனால் அவர்களுக்கான வருமானமும் பெரிய அளவில் இல்லை. இருப்பினும் சோசியல் மீடியாவின் மூலம் அவர்கள் ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட ஒன்றரை கோடிக்கு மேல் சம்பாதித்து வருகிறார்களாம்.

Also read:வாய்ப்பு வந்தவுடன் மாத்தி பேசும் திரிஷா.. ஆரம்பமாகும் அடுத்த ஆட்டம்

தற்போது எங்கு திரும்பினாலும் சோசியல் மீடியாவின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் வளர்ந்து வரும் நடிகைகள் முதல் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்கள் வரை இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சோசியல் மீடியாக்களில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் அவர்களை மில்லியன் கணக்கில் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். பிரபல நடிகர்கள் சம்பந்தப்பட்ட ஒரு போஸ்ட் வந்தால் போதும் அது உடனே ரசிகர்களால் ட்ரெண்ட் ஆகிவிடுகிறது. இதன் மூலம் பிரபலங்கள் அதிக அளவில் லாபம் பெற்று வருகின்றனர்.

Also read:விஜய்யின் குடும்ப குத்துவிளக்கு ஹன்சிகாவா இது.. உடல் எடை மெலிந்து செம க்யூட்டான புகைப்படங்கள்

அந்த வகையில் திரிஷா ஒரே ஒரு போஸ்ட் போட்டாலே 15 லட்சம் வரை வருமானம் வருகிறதாம். அதே போன்று ஹன்சிகாவுக்கு ஒரு போஸ்ட் மூலம் ஐந்து முதல் பத்து லட்சம் வரை கிடைக்கிறது. காஜல் அகர்வாலுக்கு 10 முதல் 20 லட்சம் வரை வருமானம் வருகிறது.

இதை வைத்து பார்க்கும் போது சோசியல் மீடியாவின் மூலம் நடிகைகளுக்கு மாதம் 50 முதல் ஒன்றரை கோடி வரை வருமானம் கிடைக்கிறதாம். இதனால்தான் முன்னணி நடிகர்கள் பலரும் தங்களுக்கென சொந்தமாக சேனல் ஆரம்பித்து கல்லாகட்டி வருகின்றனர்.

Also read:சர்ச்சைக்கு பஞ்சமில்லாத திரிஷா.. 38 வயதிலும் திருமணத்திற்கு தடையாக நிற்கும் 5 சம்பவங்கள்