Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

மூன்று படங்களால் முடங்கிய கலைப்புலி தாணு: மீண்டு வருவாரா?

மூன்று படங்களால் முடங்கிய கலைப்புலி தாணு: மீண்டு வருவாரா?

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்து, பலருக்கு முன்னோடியாகத் இருந்தவர் கலைப்புலி எஸ். தாணு. ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிலம்பரசன் எனத் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் இவரது தயாரிப்பில் நடித்துப் பிரம்மாண்ட […]

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்து, பலருக்கு முன்னோடியாகத் இருந்தவர் கலைப்புலி எஸ். தாணு. ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிலம்பரசன் எனத் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் இவரது தயாரிப்பில் நடித்துப் பிரம்மாண்ட வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளனர்.

தற்போது கலைப்புலி இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் கடுமையான பின்னடைவுகளையும் சவால்களையும் சந்தித்து வருகிறது. ஒரே நேரத்தில் அவர் தயாரித்து வரும் பல பிரம்மாண்டப் படங்கள் முடங்கிக் கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தால் தாணு பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையாமல் நீண்டுகொண்டே செல்வதுடன், திட்டமிட்ட பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு செலவு அதிகரித்துள்ளதால் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வந்துள்ளது.

மற்றொருபுறம், சூர்யா – வெற்றிமாறன் கூட்டணியில் அறிவிக்கப்பட்ட ‘வாடிவாசல்’ படத்தின் பணிகளும் பாதியிலேயே முடங்கி நிற்கின்றன. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் தாமதம் ரசிகர்களிடையேயும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதேவேளையில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ட்ரெயின்’ திரைப்படத்தின் பணிகளும் நிறைவடைந்தும், பல்வேறு காரணங்களால் அதை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தவித்து வருகிறார்.

இப்படி ‘அரசன்’, ‘வாடிவாசல்’, ‘ட்ரெயின்’ என ஒரே நேரத்தில் மூன்று பெரிய திரைப்படங்களின் தயாரிப்புப் பணிகளும் வெளியீடுகளும் ஸ்தம்பித்து நிற்பதால், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கடுமையான நிதி நெருக்கடியிலும் பைனான்ஸ் பிரச்சினையிலும் சிக்கித் தவித்து வருகிறார்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.