வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

சும்மா இருக்கும் விஜய்யை சொறிஞ்சு விடும் கலாநிதி மாறன்.. ரஜினியை வச்சு வெறுப்பேற்றிய சம்பவம்

Rajinikanth – Thalapathy Vijay: சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறன் தற்போது திக்கு முக்காடி போகும் வகையில் சந்தோஷத்தில் இருக்கிறார். இதற்கு காரணம் ஜெயிலர் படத்தின் வசூல் தான். தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரியல் ரெக்கார்ட் பிரேக் என்று தற்போது ஜெயிலர் படத்தின் வசூல் சொல்லப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.

தொடர்ந்து ஜெயிலர் படத்தின் வெற்றி கொண்டாட்டங்கள் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகின்றன. இது சம்பந்தப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று கலாநிதி மாறன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து, செக் ஒன்றை கொடுத்திருக்கிறார். படத்தின் வசூலின் ஒரு பங்கு சம்பளமாக ரஜினிக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Also Read:வசூல் வேட்டையாடும் டைகர் முத்துவேல் பாண்டியன்.. மிரள வைக்கும் 3வது வார ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

அதன்படி நேற்று கலாநிதிமாறன், சுமார் 110 கோடிக்கான செக்கை தான் ரஜினிக்கு கொடுத்திருக்கிறார். மேலும் இன்று விலைமதிக்கத்தக்க சொகுசு கார் ஒன்றை ரஜினிக்கு பரிசளித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. படத்தின் ரிலீஸுக்கு முன்பே ரஜினிக்கு நூறு கோடி சம்பளமாக வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 110 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக இது போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆன பிறகு லாபத்தில் ஒரு பங்கை அந்த ஹீரோக்களுக்கு கொடுப்பது என்பது வழக்கம் தான். ஆனால் இந்த விஷயம் எப்போதுமே வெளியில் வராது. அப்படி இருக்கும் பொழுது கலாநிதி மாறன் செக் கொடுப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால், இந்த விஷயம் வெளியில் தெரிய வேண்டும் என்றே அவர் செய்திருப்பது போல் தெரிகிறது.

Also Read:ஜெயிலர் கொடுத்த உத்வேகம்.. ரஜினிக்கு வரிசைகட்டி நிற்கும் 3 படங்கள்

தமிழ் சினிமா ஹீரோக்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் தளபதி விஜய் தான். அதிகம் சம்பளம் வாங்கும் அடிப்படையில் தான் அவரை சூப்பர் ஸ்டார் என்று பல பிரபலங்களும், அவருடைய ரசிகர்களும் சொல்லி வந்தனர். தற்போது ரஜினிக்கு 210 கோடியை சம்பளமாக கொடுத்து, கலாநிதி மாறன் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக மாற்றி இருக்கிறார். எந்த காரணம் சொல்லி விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று சொன்னார்களோ, அதை தகர்த்தெறிந்து இருக்கிறார்.

ஏற்கனவே கலாநிதி மாறன் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவின் போது சூப்பர் ஸ்டார் சர்ச்சையை பற்றி கொஞ்சம் அதிகமாகவே பேசி இருந்தார். இவர் பேசிய விஷயங்கள் அப்போது பயங்கர வைரல் ஆகியது. தற்போது ரஜினிக்கு சம்பளத்தை அதிகமாக்கியிருக்கிறார். இதன் மூலம் இவர் சும்மா இருக்கும் விஜய்யை ஏதோ ஒரு காரணத்திற்காக வம்பிழுப்பது போலவே தெரிகிறது.

Also Read:கமலுக்கு 4 படம், ரஜினிக்கு இரண்டோடு நிறுத்திய பாரதிராஜா.. படுதோல்வியால் சூப்பர் ஸ்டாரை கைவிட்ட இயக்குனர் இமயம்

Trending News