ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நாலா பக்கமும் ஏழரை இழுத்து வைத்திருக்கும் விஜய்.. நேரம் பார்த்து காலை வாரி விடும் கலாநிதி

Vijay, Kalanithi Maran: தளபதி விஜய் இப்போது பெரும் சிக்கலை சந்தித்து இருக்கிறார். அதாவது உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தனது படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை நடத்த முடியாத சூழ்நிலையில் தள்ளப்பட்டு இருக்கிறார். இப்போது லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்துக்கான காரணங்கள் பல இணையத்தில் உலாவி கொண்டு இருக்கிறது.

ஆனால் திட்டவட்டமாக இனி லியோ படத்தின் ஆடியோ லான்ச் நடக்காது என்பது உறுதியாகிவிட்டது. அடுத்ததாக இப்படத்தை பிரமோஷன் செய்ய வேண்டும் என்றால் சின்னத்திரையை நோக்கி தான் வர வேண்டும். ஏனென்றால் ஆரம்ப காலங்களில் படத்தை பிரமோஷன் செய்ய சின்னத்திரை பெரிதும் பக்க பலமாக அமைந்தது.

Also Read : லியோ ஆடியோ லான்ச் டிக்கெட் வித்து பிழைக்கணும்னு அவசியம் இல்ல.. பிஸ்மிக்கு விஜய் தரப்பில் கொடுத்த பதிலடி

அதோடு மட்டுமல்லாமல் கோவிட் தொற்று காரணமாக விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தின் ஆடியோ லான்ச் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அப்போதே கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சின்னதிரையில் விஜய் பேட்டி கொடுத்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் தான் விஜய்யை பேட்டி எடுத்திருந்தார்.

மேலும் பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்ததால் சன் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் இப்போது கலாநிதி மாறன் மற்றும் விஜய் இடையே மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறது. நாலா பக்கமும் விஜய்க்கு பிரச்சனை தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. லியோ படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் கொடுக்கவில்லை என்பதால் தான் உதயநிதி ஆடியோ லான்ச் நடத்த அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Also Read : ஆடியோ லான்சை கேன்சல் பண்ணிட்டோமே தமிழ்நாட்ட குடுத்துருங்க.. உதயநிதிக்கு அஜித் கொடுத்த பதிலடி மீம்ஸ்

இந்நிலையில் லியோ படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியை சன் டிவியில் ஒளிபரப்ப கண்டிப்பாக கலாநிதி அனுமதிக்க மாட்டார். அதேபோல் கலைஞர் தொலைக்காட்சியிலும் ப்ரோமோஷன் செய்ய வாய்ப்பே இல்லை. இந்த சூழலில் விஜய் தனது பிரமோஷனுக்காக நாடி இருப்பது விஜய் தொலைக்காட்சி என கூறப்படுகிறது.

ஆரம்ப காலங்களில் விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் தளபதி விஜய் கலந்து கொண்டிருக்கிறார். அவருடைய பல படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் லியோ பட ப்ரமோஷனுகாக விஜய் டிவியை அணுகி இருக்கிறார்.

Also Read : லோகேஷ், விஜய் மோதலால் வெடிக்கும் சர்ச்சை.. இமேஜை தொட்டு பார்த்ததால் வந்த வினை

Trending News