Kalki 2898 AD: நாக் அஸ்வின் இயக்கத்தில் கடந்த 27ஆம் தேதி கல்கி 2898AD வெளியானது. உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் முதல் நாளிலேயே நல்ல விமர்சனங்களை பெற்று வசூலிலும் கெத்து காட்டியது.
அதன்படி கல்கி உலகம் முழுவதிலும் முதல் நாளில் மட்டுமே 191 கோடிகளை வசூலித்திருந்தது. இதை தயாரிப்பு தரப்பு பெருமையுடன் அறிவித்தனர். அதைத்தொடர்ந்து இரண்டாவது நாளிலும் தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
அதன்படி வெள்ளிக்கிழமை கல்கி படத்தின் வசூல் இந்திய அளவில் 60 கோடிகளை நெருங்கி இருந்தது. அதைத்தொடர்ந்து வார இறுதி நாட்கள் ஆன சனி, ஞாயிறுகளில் இதன் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதை உறுதி செய்யும் வகையில் நேற்று படம் திரையிடப்பட்ட அத்தனை இடங்களும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக தான் இருந்தது. அந்த வகையில் தயாரிப்பு தரப்பு இதுவரை கல்கி பெற்ற வசூல் 415 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
கல்கி மூன்றாம் நாள் கலெக்சன் ரிப்போர்ட்
இது பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சலார் படத்தின் மூன்றாவது நாள் வசூலை விட அதிகம். அதன் படி சலார் 3 நாளில் 295 கோடிகளை தான் வசூலித்திருந்தது.
ஆனால் அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் கல்கி 415 கோடிகளை வசூலித்து விட்டது. அமிதாப் பச்சன், கமல், பிரபாஸ் மூவர் கூட்டணியில் படம் ரசிகர்களை மொத்தமாக கவர்ந்து விட்டது. அதிலும் அஸ்வத்தாமா என்ற கேரக்டரில் அமிதாப்பச்சன் 8 அடி உயரத்தில் சிலிர்க்க வைத்து விட்டார்.
அதேபோல் இரண்டு காட்சிகளில் வந்தாலும் சுப்ரீம் யாஸ்கின் கேரக்டரில் கமல் மிரட்டி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படியாக அடுத்த பாகத்தை எதிர்பார்க்க வைத்திருக்கும் கல்கி இனிவரும் நாட்களிலும் வசூல் வேட்டையாடும் என்பதில் சந்தேகம் இல்லை.