திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரெண்டு வாரத்தில் 1000 கோடி வசூலை அள்ளிய கல்கி.. இந்தியன் 2க்கு அடிக்காத அதிர்ஷ்டம், ஒதுங்கிய கமல்

Kalki and Indian 2: ஒவ்வொரு வாரமும் புது புது படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டே வருகிறது. அதிலும் பிரம்மாண்ட படங்கள் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் என்றால் திருவிழா மாதிரி கொண்டாடும் அளவிற்கு ரசிகர்கள் அப்படத்தை ஆரவாரப்படுத்தி விடுகிறார்கள். ஆனால் சமீபத்தில் தமிழ் சினிமாவில் இருந்து வெளிவரக்கூடிய படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளாத அளவிற்கு இருப்பதால் மற்ற மொழிகளில் உள்ள படங்களை பார்த்து வரவேற்பு கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த வகையில் கடந்த மாதம் ஜூன் 27ஆம் தேதி வெளிவந்த கல்கி 2898 AD வெளியாகி இரண்டு வாரம் தாண்டிய நிலையில் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாபச்சன், கமல், தீபிகா படுகோன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் வசூல் அளவில் பெருத்த லாபத்தை பார்த்து வருகிறது.

கல்கி இடம் தோற்றுப் போன இந்தியன் 2

இதில் முக்கிய ஹீரோவாக அமிதாப்பச்சன், வில்லனாக கமல் நடிப்பு ரசிகர்களிடமிருந்து பாராட்டை பெற்றுவிட்டது. ஆனால் பிரபாஸ் காட்சிகள் வரும் பொழுது திருப்தி அளிக்காத வகையில் கடுப்பேற்றும் விதமாகத்தான் இருந்தது என்று மக்கள் விமர்சனம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு கிளைமேக்ஸ் காட்சியில் கடைசி பத்து நிமிடத்தில் வந்த பிரபாஸ் காட்சிகள் புல்லரிக்க வைத்து விட்டது.

அந்த வகையில் இப்படத்தில் இரண்டாம் பாகம் எதிர்பார்க்காத அளவிற்கு இன்னும் பிரமாண்டமாக இருக்கும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கல்கி படம் வெளியாகி இரண்டு வாரத்திலேயே உலக அளவில் 1000கோடி வசூலை தாண்டி உள்ளதாக தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள்.

இந்த ஒரு விஷயத்தை பார்க்கும் பொழுது கல்கி படத்துடன் கொஞ்சம் கூட நெருங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது நேற்று வெளியான இந்தியன் 2 படம். பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கியும் பிறவி கலைஞனாக இருக்கும் கமல் நடிப்பில் வெளிவந்தும் கல்கி படத்தின் முன் இந்தியன் 2 படம் அப்பட்டமாக தோற்றுப் போய்விட்டது.

இதனால் போட்ட பணத்தை கூட எடுக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக தான் இருக்கிறது. அந்த வகையில் இந்தியன் 2 படத்துக்கு அடிக்காத அதிர்ஷ்டம் தெலுங்கு படமான கல்கிக்கு கை கொடுத்திருக்கிறது. அதிலும் கல்கியில் வில்லனாக கமல் நடிப்பை பாராட்ட முடிந்த அளவிற்கு கூட இந்தியன் படத்தில் அவருடைய கதாபாத்திரங்கள் அமையாமல் போகிவிட்டது.

இப்படியே போனால் ஹீரோ அந்தஸ்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கமல் ஒதுங்க வேண்டியதுதான். ஏனென்றால் ஹீரோவை விட வில்லன் கேரக்டர் கமலுக்கு செட்டாகுது. அதே நேரத்தில் கேட்ட சம்பளமும் கிடைக்குது என்றால் இனி இவருடைய டிராக் அதை நோக்கி தான் போகும். அந்த வகையில் கல்கி இரண்டாம் பகுதியில் முழுக்க முழுக்க கமலின் வில்லத்தனம் தான் இருக்கப் போகிறது. அதனால் ஒரேடியாக ஹீரோவிலிருந்து கமல் ஒதுங்கி கொள்வது அவரை நம்பி இறங்கும் தயாரிப்பாளருக்கு அவர் செய்த மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

இந்தியன் 2 படத்தின் வசூல் ரிப்போர்ட்

Trending News