திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கமல் கேரியரில் நடித்த ஒரே ஒரு மோசமான படம்.. இயக்குனருக்கு உதவ நினைத்ததால் ஏற்பட்ட சங்கடம்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வித்தியாசத்தை காட்டும். தன்னுடைய கேரக்டருக்காக எவ்வளவு ரிஸ்க் வேண்டுமானாலும் எடுத்து நடிக்கும் கமல்ஹாசன் இதுவரை எத்தனையோ வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார்.

ஆனால் அவருடைய திரை வாழ்வில் மோசமான திரைப்படம் என்று பெயர் வாங்கிய ஒரு திரைப்படமும் இருக்கிறது. இதுவரை இப்படம் அவருக்கு ஒரு கருப்பு புள்ளியாக இருக்கிறது. 1993ல் ஜி என் ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த மகராசன் என்ற திரைப்படம் தான் அது.

Also read : ஹிந்தி படம் நடிக்க போனதால் கமலுக்கு வந்த நிலைமை.. புகழை மட்டுமல்லாமல் நடிகையையும் தூக்கிய நாயகன்

கமல், பானுப்பிரியா, வி கே ராமசாமி, ரமேஷ் அரவிந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த அந்த திரைப்படம் கமலுக்கு ஒரு தோல்வி படமாக அமைந்தது. லோக்கல் சென்னை பாஷையை பேசி நடித்திருக்கும் கமல் அந்த படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்திருந்தாராம்.

ஏனென்றால் ஜி என் நாகராஜன் கமலை வைத்து மீண்டும் கோகிலா, கல்யாண ராமன், கடல் மீன்கள் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். அந்த வகையில் கமலுக்கு அவரின் மீது நல்ல மதிப்பும், மரியாதையும் இருக்கிறது. அதனால் தான் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த அவருக்கு கமல் இந்த படத்தின் மூலம் உதவி செய்தார்.

Also read : ரஜினி, கமலை மிரட்டிய வில்லன் நடிகர்.. சிவாஜியின் நடிப்பை பார்த்து நடுங்கிய சம்பவம்

அப்படி கிடைத்த இந்த வாய்ப்பை இயக்குனர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. கமலை விட ஹீரோயின் பானுப்ரியாவுக்கு அந்த படத்தில் முக்கியத்துவம் இருந்தது. இதுதான் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம். மிகவும் மோசமான கதை என்று பெயர் வாங்கிய இந்த படத்திற்குப் பிறகு இயக்குனர் வேறு எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை.

அந்த அளவுக்கு இந்த திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. இதனால் அவர் சினிமாவை விட்டு ஒதுங்கி வாழ்ந்து வந்தார். கமல் மீது மிகுந்த பிரியம் கொண்ட இவர் கடந்த வருடம் ஜூன் மாதம் தன்னுடைய 90 வது வயதில் உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார்.

Also read:விக்ரம் பட 500 கோடி வசூலுக்கு லோகேஷ் மட்டுமே காரணம்.. கமலஹாசனை சீண்டி பார்க்கும் தயாரிப்பாளர்

Trending News