வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

அக்கடதேசத்தில் துரத்தி அடிக்கப்பட்ட கமல்.. பல வருடங்கள் மறைக்கபட்ட மாஃபியா கும்பலின் ரகசியம்

Kamal Haasan: உலகநாயகன் கமலஹாசனை இந்திய சினிமா உலகில் என்சைக்ளோபீடியா என்று சொல்வது உண்டு. இன்று ஆண்டவராக எல்லோர் கண்களுக்கும் தெரிந்தாலும் அவர் நிறைய ஏற்ற தாழ்வுகளை சந்தித்து தான் சினிமாவில் ஜெயித்திருக்கிறார். அதில் பல வருடங்களுக்கு முன் நடந்த முக்கியமான சம்பவம் ஒன்று தற்போது வெளியாகி புயலை கிளப்பி இருக்கிறது.

ஒரு மொழியில் நடிக்கும் ஹீரோக்கள் மற்ற மொழி படங்களில் ஜெய்ப்பது என்பது அசாதாரணமான விஷயம். உதாரணத்திற்கு மலையாள ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் ஜெயித்த அளவில் வேறு எந்த மொழி ஹீரோக்களும் ஜெயிக்கவில்லை. அதேபோன்றுதான் தமிழ் படங்களின் ஹீரோக்களும். ஆனால் இந்த இலக்கணத்தை கொஞ்சம் அசைத்துப் பார்த்தவர் தான் கமல்.

Also Read: இந்தியன்-2 முதல் கங்குவா வரை.. ஈவிபி ஃபிலிம் சிட்டியில் இதுவரை நடந்த கொடூரமான விபத்துக்கள்

அரங்கேற்றம் படத்தை இந்தியில் ரீமேக் செய்த போது ஒரு சின்ன கேரக்டரில் வந்து போவார் கமல். அதன் பின்னர் 1981 ஆம் ஆண்டு ரிலீஸ் ஏக் துஜே கேலியே படத்தின் மூலம் இந்தி திரை உலகில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தினார். அதிலிருந்து கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு கமலுக்கு தொடர்ந்து இந்தி பட வாய்ப்புகள் கிடைத்தன. அவர் பாலிவுட் ஹீரோவாகவே மாறிவிட்டார்.

கமலுக்கு வைக்கப்பட்ட செக்

கமலஹாசனின் இந்த பரிணாமம் இந்தி திரை உலகில் முன்னணி ஹீரோக்களுக்கு அச்சத்தை உண்டாக்கியது. அதிலும் ஹிந்தியில் சிறந்த குணச்சித்திர கதாபாத்திரத்திற்காக கமலுக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டிருந்தது. அவருடன் நாமினை செய்யப்பட்டிருந்தவர் பாலிவுட்டின் மிகப்பெரிய ஹீரோ ரிஷி கபூர்.

பாலிவுட் உலகம் இன்றிலிருந்து அன்று வரை நெப்போடிசத்திற்கு பேர் போனதாக இருக்கிறது. இப்படி ஒரு இன்டஸ்ட்ரியில் கமலின் வளர்ச்சி யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது. இதனால் மும்பையில் இருந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் அமைப்பைக் கொண்டு கமலுக்கு மிரட்டல் விடப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் கமல் திடீரென இந்தி சினிமா உலகில் இருந்து காணாமல் போய்விட்டார்.

கமலை விரட்டிய சம்பவத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கும் சம்பந்தம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. பாலிவுட்டை விட்டு மொத்தமாக ஒதுங்கி இருந்த கமல் பல வருடங்களுக்குப் பிறகு ஹேராம் படத்தில் ஷாருக்கானை நடிக்க வைத்து அதன் மூலம் பாலிவுட்டுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார்.

Also Read: இந்த மூணு விஷயத்தில் கமல் வாய திறக்கலைன்னா.. பிக் பாஸ்ஸின் மொத்த டிஆர்பியும் போச்சு

Trending News