வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

உலகநாயகன், சூப்பர் ஸ்டார் படத்தை மட்டும் இயக்கவே மாட்டேன்.. அடித்துச் சொன்ன டாப் இயக்குனர்

60 வயதை கடந்தாலும் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் முக்கிய நடிகர்கள் தான் உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர்கள் இருவருடைய படங்களை இயக்குவதற்கு முன்னணி இயக்குனர்கள் முதல் இளம் இயக்குனர்கள் வரை வரிசை கட்டி காத்திருக்கின்றனர்.

ஆனால் டாப் இயக்குனர் ஒருவர் கமல் மற்றும் ரஜினி படத்தை மட்டும் இயக்கவே மாட்டேன் என்று அடித்துச் சொன்ன பேட்டி ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது. இவருடைய இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் பலரும், ‘இந்த இயக்குனருக்கு என்ன ஒரு திமிரு, தெனாவெட்டு!’ என வசை பாடுகின்றனர்.

Also Read: கேவலமான போஸ்டர் வெளியிட்டு அப்பாவை அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா.. மார்க்கெட்டை கொறச்சுடாதீங்க அம்மணி

சில வருடங்களுக்கு முன்பு முக்கிய நிகழ்ச்சியான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குனர் பாலா கலந்து கொண்டார். அப்போது பத்திரிகையாளர்கள் பாலாவிடம் ரஜினி, கமலை வைத்து படம் இயக்குவீர்களா? என கேட்டுள்ளார்கள்.

அதற்கு பாலா, ‘சத்தியமாக அவர்கள் இருவரையும் நான் வைத்து படம் இயக்கவே மாட்டேன்’ என அடித்துக் கூறியுள்ளார். இது மாதிரி எந்த இயக்குனர்களும் இதுவரை கூறியதில்லை. இவருடைய பேட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

Also Read: சாமியார் வேஷத்திற்கு கச்சிதமாக பொருந்திய 6 நடிகர்கள்.. பரமசிவனாய் பட்டைய கிளப்பிய சூப்பர் ஸ்டார், கமல்

அதன்பின் பாலாவிடம், ‘உங்கள் படத்தில் நடிக்க நடிகருக்கு என்ன இருக்க வேண்டும்?’ என்று கேட்டதற்கு, ‘என் படத்தில் நடிக்க சாதாரண மனிதராக இருக்க வேண்டும். திறமை இருக்க வேண்டும். அழகு, பணம் இவை எதுவும் எனக்கு வேண்டாம்.

அவர்களை நான் சிறந்த முறையில் நடிக்க வைக்க முடியும். இதுவரை நான் எடுத்த படங்களுக்கெல்லாம் அப்படித்தான் நடிகர் நடிகைகளை தேர்வு செய்து கொண்டிருக்கிறேன். இனியும் என்னுடைய அடுத்த படத்திற்குருக்கும் அது மாதிரியாகத்தான் தேர்வு செய்து கொண்டிருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Also Read: கமலை உயிருக்குயிராய் காதலித்த நடிகை.. கெஞ்சி, கதறியும் ஏற்காத உலகநாயகன்

Trending News